அமித் ஷா "ப்ளே புக்கை" கையில் எடுத்த அகிலேஷ்.. உபியில் பாஜகவிற்கு இடி- அடுத்தடுத்து விழும் விக்கெட்
லக்னோ: உத்தர பிரதேச அரசியல் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம் ஆதித்யநாத் vs அகிலேஷ் யாதவ் என்று கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருக்கிறது. பாஜகவிற்கு எதிராக மிகப்பெரிய போட்டியாக அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பாஜக, சமாஜ் வாதி, பகுஜன் சமாதி, காங்கிரஸ் என்ற மிகப்பெரிய நான்கு முனை போட்டி அங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் தலைவிதியை நிர்ணயிக்க போகும் சட்டசபை தேர்தலாக உபி தேர்தல் பார்க்கப்டுகிறது.
ஆம் ஆத்மி, ராஷ்டிரிய லோக் தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முக்கிய கேம் சேஞ்சர்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் அகிலேஷ் யாதாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு அதிகரித்து வருகிறது.

ஆதரவு
அங்கு அரசியல் களம் அகிலேஷ் யாதவ் vs ஆதித்யநாத் என்று மாறிக்கொண்டு இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் யாதவ் ஜாதியினர், மற்ற இடைநிலை ஜாதியினர் மத்தியில் அகிலேஷ் யாதாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. அதேபோல் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் உள்ளிட்ட சிறுபான்மையினர் மத்தியிலும் அகிலேஷ் யாதவிற்கான ஆதரவு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பாஜக திட்டம்
இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் அப்படியே அமித் ஷாவின் ப்ளே புக்கை உத்தர பிரதேசத்தில் கையில் எடுத்துள்ளார். முதல் விஷயம் எதிர் கட்சிகளில் இருக்கும் முக்கிய தலைகளை தூக்குவது. அதன்படி வரிசையாக முக்கிய தலைகள் மற்ற கட்சிகளில் இருந்து சமாஜ் வாதி கட்சியில் இணைந்து வருகிறார்கள். பாஜகவை சேர்ந்த காலிலாபாத் எம்எல்ஏ திக்விஜய் நரேன் சுபே இன்றுதான் சமாஜ் வாதி கட்சியில் இணைத்தார்.

ஜாதி
இவர் மேற்கு உத்தர பிரதேசத்தில் முக்கியமான ஜாதி தலைவராக கருதப்பட்டவர். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த வினய் ஷங்கர், குஷால் திவாரி, கணேஷ் பாண்டே ஆகியோரும் இன்றுதான் சமாஜ் வாதியில் இணைந்தனர். இவர்கள் மூவருமே வலிமையான ஜாதி தலைவர்கள் என்பதால் அகிலேஷ் யாதாவிற்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு இருக்கிறது.

குட்டி காட்சிகள்
அதேபோல் யாதவ் கட்சி அல்லாத மற்ற இடைநிலை ஜாதி கட்சிகளுடன் அகிலேஷ் கூட்டணி வைக்க தொடங்கி உள்ளார். குட்டி குட்டி கட்சிகளை கூட்டணியில் சேர்த்து வருகிறார். சுக்லாதேவ் பாரத் சமாஜ் கட்சி என்ற கட்சி ராஜ்பார் ஜாதியினர் இடையே ஆதிக்கம் கொண்டது ஆகும். அம்மாநிலத்தில் 2 சதவிகித மக்கள் மட்டுமே இந்த ஜாதியில் இருந்தாலும் 20 இடங்களில் இவர்கள் முடிவுகளை மாற்ற கூடியவர்கள்.

கூட்டணி
அதேபோல் மஹான் தல் என்ற மவுரியா ஜாதி கட்சியுடன் அகிலேஷ் கூட்டணி வைத்துள்ளார். 12-15 இடங்களில் இந்த கட்சி முடிவுகளை தீர்மானிக்கும் ஆற்றல் கொண்டது. அதேபோல் ஆர்எல்டி, அப்னா தல் போன்ற கட்சிகளும் கொஞ்சம் கொஞ்சமாக அகிலேஷ் பக்கம் வந்து கொண்டு இருக்கின்றன. இதற்கு முந்தைய தேர்தல்களில் பாஜகதான் இப்படி சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது.

பாஜக
சிறிய ஜாதி கட்சிகளை வைத்து ஸ்விங் வாக்குகளை பாஜக வென்றது. அமித் ஷாவின் யுக்தி இது. பாஜகவின் அந்த அஸ்திரத்தை தற்போது அகிலேஷ் கையில் எடுத்துள்ளார். இதனால் உத்தர பிரதேச அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications