மகன் என்கவுண்டர்.. 3வது நாளே அப்பாவும் சுட்டுக்கொலை.. அடிக் அகமது படுகொலை.. உபியில் காட்டு ராஜ்ஜியம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 வருடமாக அங்கே 13 நாட்களுக்கு 1 என்ற விகிதத்தில் என்கவுண்டர் சம்பவங்கள் நடந்து வருகின்றன,

கடந்த 2017 ஜூன் மாதம் ஆதித்யநாத் ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். அதில் ''இங்கு யாருமே குற்றம் செய்ய கூடாது. குற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். குற்றம் செய்பவர்களை சுடுவதில் கூட தவறு இல்லை'' என்று குறிப்பிட்டார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். ஆனாலும் அங்கு என்கவுண்டர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
உத்தர பிரதேச அரசு ஆவணங்களின்படி 2017ல் வருடத்தில் 1,038 பேர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். கணக்குப்படி தினமும் 4 பேர் மரணம் அடைகிறார்கள். ஒரு மாதத்திற்கு 120 பேர் வரை கொலை செய்யப்படுகிறார்கள். இந்த என்கவுண்டர்களில் 238 பேர் மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள்.
கடந்த 10 மாதத்தில் 138 பேர் அங்கே என்கவுண்டர் செய்யப்பட்டு உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் பிரயாக்ராஜில் போலீஸ் காவலுக்கு மத்தியில் ஊடகங்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கேமரா முன்பாகவே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்த என்கவுண்டர்களில் 400 பேர் வரை மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார்கள்.

ஜெயிலில் இருக்கும் பலர் விடுதலை செய்யப்பட்டு ஒரு வாரம் கழித்து என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். இவர்களை அரசே தங்கள் சொந்த செலவில் பெயிலில் எடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இல்லை என்றால் சாலை ஓரத்தில் கடை வைத்து இருக்கும் நபர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு அடுத்த நாளே கொலை செய்யப்படுகிறார்கள்.
இந்த நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட கிரிமினல் கேஸ்கள் உள்ளன. அவர் எம்பியாக இருந்தவர் என்றாலும் அரசியல் தாதா என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த என்கவுண்டர் போலீஸ் என்கவுண்டர் என்று கூறப்பட்டு வரும் நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது கொலை செய்யப்பட்டு உள்ளார். சிறையில் இருந்த அவரை மருத்துவ பரிசோதனை என்று கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அங்கே செய்தியாளர்கள் போல கெட்டப் போட்டு வந்தவர்கள் போலீசாருக்கு முன்னிலையில், கேமராவிற்கு முன்னே இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தி உள்ளனர். முதலில் அடிக் அகமதுவை சுட்டுவிட்டு அதன்பின் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கேமராக்களுக்கு முன்னிலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதை பற்றி விசாரிக்க நீதி விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு உள்ளது.
அடிக் அகமது ஏற்கனவே கடத்தல் கேஸ், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கு, உமேஷ் பால் கொலை வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஆவார். இவர் பெரிய குற்றவாளி என்றாலும்.. சட்ட ரீதியாக அவருக்கு தண்டனை கொடுப்பதே சரியானது.
மாறாக போலீஸ் கண் முன்னே அவரை ஒரு கும்பல் சுட்டுக்கொலை செய்துள்ளது.
உத்தர பிரதேச என்கவுண்டர்: உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அங்கே என்கவுண்டர்கள் சாதாரணமாக கூட நடப்பது இல்லை. என்கவுண்டர் செய்யப்படுவதற்கு முன் கொடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பலருக்கு நெஞ்சு எலும்பு வரை உடைந்து இருக்கிறது. சிலரின் கைகள் தீயில் பொசுக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மோசமான சித்திரவதை செய்யப்பட்டு இருக்கிறது.
இதில் எல்லாமே போலி என்கவுண்டராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஜெயிலில் இருக்கும் நபர்களை வெளியே எடுத்து, அவர்கள் ஜெயிலில் இருந்த போது நடந்த குற்றங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டு பின் கொலை செய்யப்படுகிறார்கள். 20 வருடம் ஜெயிலில் இருந்த நபர்கள் கூட இப்படி வெளியே எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
பெரும்பாலும் ஷாரான்பூர், ஷாம்லி, முசாபர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களே இப்படி கைது செய்யப்படுகிறார்கள். முக்கியமாக பெயிலில் எடுக்க பணம் இல்லாத வீடுகளில் உள்ள ஆண்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே குற்றம் ஏதாவது செய்து இருந்தால் இன்னும் வசதி இருக்கிறது.
முக்கியமாக இதில் குடும்பங்கள் மொத்தமாக குறிவைக்கப்படுகிறது. ஒரு வீட்டில் ஒரு ஆண் கொலை செய்யப்பட்ட சில நாட்களில் அடுத்தடுத்த கைது அதே வீட்டில் நடக்கிறது. இப்படி 60க்கும் அதிகமான வீட்டில் கைதுகள் நடந்து இருக்கிறது. அங்கே இஸ்லாமியர்கள்தான் அதிக அளவில் என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்கே உத்தர பிரதேச அரசை ஜங்கிள் ராஜ்.. அதாவது காட்டு ராஜ்ஜியம் என்று கடுமையாக விமர்சனம் செய்வது வழக்கமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications