உ.பி.யில் பாஜக எம்பியின் மகன் மீது துப்பாக்கிச்சூடு; மைத்துனர் கைது!
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாஜக எம்பியின் மகன் மர்ம நபர்களால் சுடப்பட்டார். இது தொடர்பாக அவரது மைத்துனரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் பாஜக எம்பியின் மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஆயுஷ் கிஷோரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும், மோகன்லால்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி.யாகவும் இருப்பவர் கவுஷல் கிஷோர். இவரது மகன் ஆயுஷ் கிஷோர். இந்த நிலையில் இவர் இன்று காலை தனது மைத்துனருடன் நடைபயிற்சியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஆயுஷ் கிஷோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் மார்பில், தோள் பட்டையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ஆயுஷ் கிஷோரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது அவரது மைத்துனர் ஆதர்ஷ், ஆயுஷ் கிஷோர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications