ஜாக்பாட்! போலீசுக்கு மாத அலோவன்ஸ் ரூ.500! ரூ.31000 கோடியில் குடியிருப்பு! யோகி அமைச்சரவை ஒப்புதல்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் போலீசாருக்கான மோட்டார் சைக்கிள் மாதாந்திர அலோவன்ஸ் தொகையை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இந்நிலையில் தான் நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலம் நலம்சார்ந்து பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் சமீபத்திய மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வே பணிகளை மேற்கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதேபோல் போலீசாரின் நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி உத்தர பிரதேச மாநிலத்தில் பணியாற்றும் போலீசாரின் மோட்டார் சைக்கிளுக்கான அலோவன்ஸ் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மாதம் ரூ.200 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த தொகையை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியது. இதன்மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6.78 கோடி கூடுதல் சுமை ஏற்பட உள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் போலீசாருக்கு கூடுதலாக குடியிருப்புகள் கட்டவும் திட்டமிடப்படப்பட்டு இருந்தது. இதற்கும் நேற்றைய கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி மாநிலத்தில் ரூ.31,089.14 கோடி மதிப்பில் போலீசாருக்கு குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி லக்னோவில் ரூ.655.41 கோடி மதிப்பில் உத்தர பிரதேச சிறப்பு பாதுகாப்பு படை தலைமையகம், எஸ்எஸ்எப் 1வது, 2வது பட்டாலியன் குடியிருப்பு உள்பட ரூ.431.70 கோடியில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் கோரக்பூர். லக்னோவில் ரூ.391.56 கோடி மதிப்பில் பெண்கள் அடங்கிய பட்டாலியனுக்கான குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
மேலும் ஷாம்லி, சம்பல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முறைகே போலீசாருக்கான குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. ரிசர்வ் போலீஸ் லைன்கள் கட்டவும், போக்குவரத்து பூங்கா, போலீஸ் துப்பாக்கிகளை காட்சிப்படுத்தும் வகையிலான அருங்காட்சியகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நேற்றைய அமைச்சரவை கூட்டம் என்பது போலீசாருக்கு ஜாக்பாட் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications