பத்திரப் பதிவு கட்டணத்தில் அதிரடி மாற்றம்! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சூப்பர் அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநில குடிமக்கள் தங்கள் சொத்துக்களை ரத்த சொந்தங்களுக்கு பரிமாற்ற வெறும் ரூ.5,000 செலுத்தினால் போதும் என்று அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இதற்கு முன்னர் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் வரை யாரும் முதலமைச்சராக தொடர்ந்ததில்லை. ஆனால், யோகி ஆதித்யநாத் இதை முறியடித்துள்ளார். தற்போது 7வது ஆண்டாக அவர் முதலமைச்சராக நீடித்து வருகிறார். இதனை கொண்டாடும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களில் ஒன்றுதான் பத்திரப்பதிவு திட்டம்.

இந்த திட்டம் மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர்கள், தங்கள் ரத்த சொந்த உறவினருக்கு சொத்தை மாற்ற வேண்டும் எனில் வெறும் ரூ.5,000 பதிவு கட்டணம் செலுத்தினால் போதுமானது. எவ்வளவு மதிப்புள்ள சொத்தாக இருந்தாலும் அதை மாற்ற இந்த சிறிய தொகை போதுமானதாகும். முன்னதாக இப்படி பதிவு செய்ய வேண்டும் எனில், சொத்தின் மதிப்பில் 7 சதவிகிதத்தை கொடுக்க வேண்டும். அதாவது ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொத்தை மாற்ற வேண்டும் எனில் ரூ.7 லட்சம் பதிவு கட்டணமான செலுத்த வேண்டும்.
இந்த திட்டம் குறித்து ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அம்மாநில மக்களிடையே இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. எனவே இதனை நீடிப்பதாக தற்போது அம்மாநிலத்தின் நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பயனர்கள் பயனடைந்துள்ளனர். எனவே இதனை நீடிக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.
இதற்கு முந்தைய அரசாங்கங்கள் மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை. சாமானிய மக்களுக்காக எந்த திட்டங்களையும் கடந்த அரசுகள் நிறைவேற்றவில்லை. பாஜகதான் மக்களின் கவலைகளை கணக்கில் கொண்டு சிறப்பான திட்டங்களை இயற்றி வருகிறது" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications