அதிரடி.. டெங்கு, சிக்குன்குனியாவை கட்டுப்படுத்த.. யோகி ஆதித்யநாத் போட்ட உத்தரவு! என்னனு பாருங்க!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்றுநோய்களை கட்டுப்படுத்தத அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில் யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வர் பதவியில் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் தொற்று நோய்கள் தடுப்பு குறித்து அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்நதது. இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசினார். அப்போது, ‛‛மாநிலத்தில் தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டம். குறிப்பாக டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டு்ம. அதோடு ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் தொற்றுநோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில் நோடல் அதிகாரி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த விஷயத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகமும் தொற்றுநோய் குறித்த விபரங்களை மறைக்காமல் வழங்க வேண்டம். அதோடு தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அரசு சார்பில் அக்டோபர் மாதம் முதல் 75 மாவட்டங்களிலும் தொற்றுநோய் தடுப்புக்கான விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட உள்ளது. இதனை சுகாதாரத்துறை ஒருங்கிணைக்க வேண்டும். கல்வி, கிராமப்புற மேம்பாடு, நகர மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, விவசாயம், அடிப்படை கல்வி உள்ளிட்ட துறைகளை சுகாதாரத்துறை ஒருங்கிணைக்க வேண்டும்.
மேலும் நவம்பர் மாதம் 15ம் தேதி வரை டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை கவுதம் புத் நகர், காசியாபாத், லக்னோ, கான்பூர் நர், மீரட், மொரடாபாத் மாவட்டங்களிலும், மலேரியாவை பொறுத்தவரை பரேலி, சிதாபூர், ஷாஷகான்பூர், ஹரோடி, படான், பிலிபிட், சாம்பல் உள்ளிட்ட மாவட்டங்களிலும், சிக்குன்குனியாவை பொறுத்தவரை பிரக்யாராஜ், கான்பூர் நகர், பராபங்ககி, குஷி நகர், சான்ட் கபீர் நகர், சாஹரான்பூர், பாஸ்டி உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கிழக்கு உத்தர பிரதேச மாவட்டங்களில் 2017 ல் கூட்டு இடைநிலை குழு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இங்கு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7 வரை ஜப்பான் மூளைக்காய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியாவால் இறப்பு எதுவும் பதிவாகவில்லை. இதன்மூலம் கடந்த 5 ஆண்டுகளில் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனி முழுமையாக அந்த நோய்களை ஒழிக்க வேண்டும். இதனால் மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார கட்டமைப்பை உடைக்கும் எந்த முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என பேசினார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications