காட்டில் கிடந்த 12 வயது சிறுமி உடல்.. விசாரிக்க போன போலீசுக்கு ஷாக்.. திணற வைத்த சிறுவன்.. பகீர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மோடிநகரில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோடி நகரில் 12 வயது சிறுமி சமீபத்தில் காணாமல் போய் உள்ளார். இவர் மைனர் என்பதால் பெயர் உள்ளிட்ட விவரங்கள் போலீசாரால் வெளியிடப்படவில்லை.

கடந்த வாரம் காணாமல் போன அந்த சிறுமியை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். அந்த 12 வயது சிறுமி பள்ளிக்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பவில்லை.

கொலை

கொலை

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து வந்துள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு அருகே இருக்கும் காட்டுப்பகுதி ஒன்றில் அந்த சிறுமியின் உடல் இரண்டு நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆடை கிழிந்த நிலையில் மிக மோசமாக அவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிறுமியின் தலையில் பெரிய காயமும் இருந்துள்ளது. கல்லால் யாரோ அடித்து அந்த சிறுமியை கொலை செய்ததற்கான தடயங்கள் இருந்துள்ளன.

தடயம்

தடயம்

அதேபோல் அந்த காட்டின் இன்னொரு பகுதியிலும் ரத்தம் இருந்துள்ளது. இதனால் அந்த பாதையில்தான் கொலைகாரன் சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் யூகித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த சிறுமி யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார், யாருடன் எல்லாம் பேசினார் என்று விசாரித்து உள்ளனர். அந்த சிறுமியுடன் உடன் படிக்கும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதில் சில சிறுமிகள் மாணவர் ஒருவர் அந்த சிறுமியை காதலிக்க சொல்லி தொல்லை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை

விசாரணை

இதையடுத்து அந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். முதலில் அந்த சிறுவன் அந்த சிறுமியை தெரியாது என்று கூறி உள்ளான். அதன்பின் சிறுமியை ஒரு தலையாக காதலித்ததாகவும், ஆனால் சிறுமி காணாமல் போனது பற்றி தனக்கு எதுவும் தெரியாது. அவர் காணாமல் போன வருத்தத்தில் பள்ளிக்கு செல்லவில்லை என்றும் வாக்குமூலம் கொடுத்துள்ளான். இதை போலீசாரும் முதலில் நம்பி உள்ளனர். அந்த சிறுமிக்கு யாரேனும் தொல்லை கொடுத்துள்ளனரா என்றும் விசாரித்து உள்ளனர். அதன்பின் சிறுமி காணாமல் போன அன்று மாலை எங்கே இருந்தான் என்று சிறுவனிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

இல்லை

இல்லை

இதற்கு சிறுவன் மாற்றி மாற்றி பதில் அளித்து இருக்கிறார். முதலில் வீட்டில் இருந்ததாக வாக்குமூலம் அளித்து உள்ளான். ஆனால் அவன் வீட்டில் இல்லை என்று வீட்டில் இருந்தவர்களே கூறி உள்ளனர். இதையடுத்து மாட்டிக்கொள்வோம் என்பதால் நண்பர்களோடு விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறி உள்ளான். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அவனை கடுமையாக விசாரணை செய்து உள்ளனர். ஆனால் மழுப்பலாக பேசிய அந்த சிறுவன்.. அன்று மாலை சிறுமியை பார்த்ததாகவும், அதன்பின் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும், சிறுமியின் மரணத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று கூறி உள்ளான்.

மரணம்

மரணம்

இதையடுத்து அந்த சிறுவனிடம் பொய் சொன்ன போலீசார்.. அந்த சிறுமி சாகவே இல்லை. அவருக்கு இன்றுதான் சுயநினைவு திரும்பியது. அவரே சொன்னால் உனக்கு தண்டனை அதிகம். நீயே ஒப்புக்கொண்டால் தண்டனை குறைவு என்று கூறி உள்ளனர். இதையடுத்து பயந்து போன சிறுவன் அந்த பொய்யை உண்மை என்று நம்பி குற்றத்தை ஒப்புக்கொண்டு இருக்கிறான். அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்று முடியாததால் தலையில் கல்லால் அடித்து கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான். இதையடுத்து அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் ஜெயிலில் போலீசார் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+