"என் பொண்டாட்டியை காப்பாத்துங்க".. போலீசுக்கு வந்த போன்.. சம்பவ இடத்துக்கு போனால் ஷாக்.. திக் கிரைம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற கொலை சம்பவம் ஒன்று போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் இருக்கும் மோதிநகரில் வசித்து வருகிறார் விகாஸ். திடீரென கடந்த வெள்ளிக்கிழமை இவர் போலீசுக்கு பதற்றமாக போன் செய்து இருக்கிறார்.

போனில் மிகவும் பதற்றமான குரலில் என் மனைவியை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். இந்த போன் காலை கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காணவில்லை

காணவில்லை

கொஞ்சம் பொறுமையாக விஷயத்தை சொல்லுங்கள். என்ன நடந்தது என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளனர். அதற்கு அழுதபடியே பேசிய விகாஸ்.. என் மனைவி இப்போதுதான் எனக்கு போன் செய்தார். அவர் பெயர் சோனியா. அவரிடம் யாரோ கொள்ளை அடிக்க முயற்சி செய்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் ஹாப்பூர் அருகே அவரிடம் சிலர் தொல்லை செய்வதாக போன் செய்து கூறியுள்ளார். அங்கே ஹைவே பேட்ரோல் இருந்தால் உடனே அனுப்புங்கள் என்று கதறி இருக்கிறார்.

மரணம்

மரணம்

சுற்றி ஆண்கள் நின்று தொல்லை செய்வதாக கூறி உள்ளார். விகாஸ் கண்ணீருடன் சொன்னதை கேட்ட போலீசார்.. நீங்கள் சம்பவ இடத்திற்கு வந்துவிடுங்கள்.. நாங்கள் ஹை வே போலீசை அனுப்புகிறோம் என்று கூறியுள்ளனர். அதன்படியே அங்கு ஹை வே போலீசார் சென்று சோதனை செய்துள்ளனர். சம்பவ இடத்தில் சோனியா பிணமாக கிடந்துள்ளார். கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் அங்கு டோல் கேட் சிக்னலை சோதனை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நேரத்தில் அந்த பக்கத்தில் பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை.

உடல்

உடல்

விகாஸ் சொன்னது போல பெரிதாக ஆண்கள் யாரும் காரிலோ, பைக்கிலோ செல்லவில்லை. பெரும்பாலும் குடும்பம், குடும்பமாகவே அந்த நேரத்தில் கார்களில் மக்கள் சென்றுள்ளனர். அதோடு விகாஸ் கொடுத்த வாக்குமூலத்தில் மாற்றி மாற்றி பேசி இருக்கிறார். முதலில் சோனியாவை சிலர் கொள்ளையடிக்க வந்ததாக சொன்ன விகாஸ், அதன்பின் சோனியாவை சிலர் பலாத்காரம் செய்ய வந்ததாக கூறியுள்ளார். முதலில் 2 பேர் என்று கூறியவர் அதன்பின் 5 பேர் என்று கூறியுள்ளார். அதோடு சோனியா இருக்கும் இடத்தை மிக துல்லியமாக விகாஸ் கூறியதும் சந்தேகேத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொலை

கொலை

இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் விகாஸை விசாரணைக்கு அழைத்து உள்ளனர். அவரின் போன் மற்றும் லேப்டாப்பை சோதனை செய்துள்ளனர். அவரின் கூகுள் சர்ச் ஹிஸ்டரியை போலீசார் சோதனை செய்ததில் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்து இருந்தது. அதில் கொலை செய்வது எப்படி என்று அவர் தேடி பார்த்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை ரெண்டு தட்டு தட்டி தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். அதில்தான் சோனியாவை கொலை செய்தது தான்தான் என்று விகாஸ் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

கூகுள்

கூகுள்

இதில் விகாஸ், பிளிப்கார்ட்டில் இருந்து விஷம் ஒன்றை வாங்கியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கூகுளில் துப்பாக்கி எப்படி வாங்குவது என்றும் தேடி பார்த்துள்ளார் விகாஸ். இதை எல்லாம் வைத்து விகாஸை போலீசார் வளைத்து உள்ளனர். சோனியா விகாஸ் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இதில் விகாஸ் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட சண்டையில்தான் இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் விகாஸின் காதலி தலைமறைவாகிவிட்டார். இவரை பற்றிய தகவல் தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+