அயோத்தியா.. வேண்டவே வேண்டாம்.. கடைசியில் முடிவை மாற்றிய யோகி ஆதித்யநாத்? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அயோத்தி அல்லது மதுரா தொகுதியில்தான் ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் இந்த முடிவிற்கு பின் பல முக்கிய காரணங்கள் உள்ளன.

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்று சட்டசபை தேர்தலுக்கான 107 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ளது.

20 புது முகங்களுக்கு முதல் கட்ட சட்டசபை தேர்தல் வாக்காளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. கோரக்பூர் தொகுதியில் முதல்வர் ஆதித்யநாத் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 மாற்றம்

மாற்றம்

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அயோத்தி அல்லது மதுரா தொகுதியில்தான் ஆதித்யநாத் போட்டியிடுவதாக இருந்தது. கடந்த சில நாட்களாக இது தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆதித்யநாத் அயோத்தி அல்லது மதுராவில் போட்டியிட மாட்டார்.. அவர் கோரக்பூரில்தான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல கட்ட ஆலோசனைகளுக்கு, விவாதங்களுக்கு பிறகு கட்சி ஒருமித்த குரலில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மத்திய அமைச்சரும் உத்தர பிரதேச பாஜக பொறுப்பாளருமான தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார்.

அயோத்தி

அயோத்தி

அயோத்தி, மதுரா தொகுதியில் ஆதித்யநாத் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் தொடங்கி இருந்தாலும் கூட பல்வேறு காரணங்களுக்காக இந்த தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை ஆதித்யநாத் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணங்களில் ஒன்றுதான் அயோத்தியில் நடத்த உள்ளாட்சி தேர்தல். கடந்த வருடம் அயோத்தியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 40 பஞ்சாயத்து இடங்களில் வெறும் 8ல் மட்டுமே பாஜக வென்றது. அந்த மாவட்டத்தில் பாஜக படுதோல்வி அடைந்தது.

படுதோல்வி

படுதோல்வி

இந்த பஞ்சாயத்து தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி சார்பாக சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட 22 பேர் வெற்றிபெற்றனர். அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட 4 பேர் வெற்றிபெற்றனர். மொத்தமாக மாநிலம் முழுக்க உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை பெற்று இருந்தாலும் கூட அயோத்தியில் அதிக இடங்களில் தோல்வி அடைந்தது. இது அக்கட்சிக்கு பெரிய ஏமாற்றம் அளித்தது.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

அயோத்தியில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. அயோத்தி மாவட்டம் முழுக்க எங்களுக்குத்தான் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளோம் என்று பாஜகவின் செய்தி தொடர்பாளர் திவாகர் சிங்கும் தனது பேட்டியில் கடந்த வருடம் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்தே சட்டசபை தேர்தலில் அயோத்தியில் போட்டியிட வேண்டாம் என்று யோகி ஆதித்யநாத் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அயோத்தி ஆதித்யநாத்

அயோத்தி ஆதித்யநாத்

அயோத்தியில் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்துவிட்டோம். இங்கு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது ரிஸ்க் என்பதால் ஆதித்யநாத் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் இதுவரை சட்டசபை தேர்தலில் ஆதித்யநாத் போட்டியிட்டதே இல்லை. அவர் கடந்த முறை கூட சட்டசபை மேலவை வழியாகவே நியமன எம்எல்ஏ ஆகி முதல்வர் ஆனார். எனவே முதல் சட்டசபை தேர்தலிலேயே ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்ற முடிவிற்கு ஆதித்யநாத் வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

கோரக்பூர் ஆதித்யநாத்

கோரக்பூர் ஆதித்யநாத்

இந்த முறை கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவார் என்று பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரக்பூர் தொகுதி ஆதித்யநாத் மிகவும் வலுவாக இருக்கும் தொகுதியாகும். இங்கு கடந்த 70 வருடமாக ஜனசங்க காலத்தில் இருந்து பாஜக தோல்வி அடைந்ததே இல்லை. ஐந்து முறை கோரக்பூர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றிபெற்று ஆதித்யநாத் லோக்சபாவிற்கு சென்றுள்ளார். எனவே ரிஸ்க் எதுவும் எடுக்காமல்.. வலுவான கோரக்பூர் தொகுதியை ஆதித்யநாத் தேர்வு செய்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+