பத்திரிகையாளர் போல் வந்து.. ஆதிக் அகமதுவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற 3 பேர்.. காரணம் என்ன? ஷாக்
லக்னோ: உத்தரபிரதேச முன்னாள் எம்பியும், ரவுடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை நேற்று போலீஸ் கண்முன்னே 3 பேர் கும்பல் துப்பாக்கியால் சுட்டு கொன்றது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றவர்கள் பத்திரிகையாளர் போல் வந்து கொலை செய்ததும், அவர்கள் கொலை செய்வதற்கான நோக்கம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் பகுதியை சேர்ந்தவர் ஆதிக் அகமது. இவரது சகோதரர் அஷ்ரப். இதில் ஆதிக் அகமது 5 முறை எம்எல்ஏவாகவும், ஒரு முறை எம்பியாவும் இருந்துள்ளார். இவர் சமாஜ்வாதி மற்றும் அப்னா தளம் கட்சியில் செயல்பட்டுள்ளார்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்த வாரணாசி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கியும் தோல்விடைய தழுவினார். அவர் வெறும் 855 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார்.
ஆதிக் அகமது அரசியல்வாதி என்பதோடு பிரபல ரவுடியாகவும் இருந்தது. இவர் மீது கொலை, கடத்தல் உள்பட 100க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகி இருந்தது. இந்த சமயத்தில் தான் அரசியலிலும் அவர் வீழ்ச்சியடைந்தார். இதையடுத்து கடந்த 2019ல் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு அவர் தொடர்புடைய வழக்குகள் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தான் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ ராஜூ பால் கொலை வழக்கில் உமேஷ் பா என்பவர் முக்கிய சாட்சியாக இருந்தார். இவரை கடத்திய வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து ஆதிக் அகமதுவும், அவரது சகோதரர் அஷ்ரப் முகமதுவை போலீசார் நேற்று இரவு பிரக்யாராஜ் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். இதனால் அங்கு பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
இந்த வேளையில் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை இருவரிடமும் கேட்டனர். அவர்கள் அரைகுறையாக பதிலளித்த நிலையில் திடீரென்று 3 பேர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஆதிக் அகமது மற்றும் அஷ்ரப்பை சரமாரியாக சுட்டனர். 15 முதல் 20 முறை 3 பேரும் சுட்டனர். இதில் உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்ததால் ரத்த வெள்ளத்தில் ஆதிக் அகமது மற்றும் அஷ்ரப் ஆகியோர் கீழே சரிந்து விழுந்து உயிரிழந்தனர்.
இதையடுத்து 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் நாங்கள் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தான் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப்பை கொலை செய்தோம் என தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கொலை செய்யும் நோக்கத்துக்காக தங்களை பத்திரிகையாளர்கள் போல் காட்டிக்கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக எப்ஐஆர்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் உத்தர பிரதேசத்தில் கடும் பதற்றம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பட்டுள்ளது. பொதுமக்களும், அரசியல் கட்சியினர் உள்பட அனைவரும் அனுமதியின்றி வெளியே கூடக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
*****
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications