கௌதம் புத் நகரில் ஃபிலிம் சிட்டி.. அதிரடி மாற்றம் காணும் உ.பி! யோகி ஆதித்யநாத் போட்ட புது உத்தரவு
லக்னோ: கௌதம் புத் நகரில் 'ஃபிலிம் சிட்டி' கட்டுவதற்கான திட்டத்தை இறுதி செய்ய யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில் மேம்பாட்டு ஆணையத்திற்கு (YEIDA) உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
லக்னோவில் இரு தினங்களுக்கு முன்னர் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில் மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய யோகி ஆதித்யநாத் மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஃபிலிம் சிட்டி கட்டுமானப் பணிகள் 3 கட்டங்களாக நடைபெறும். முதற்கட்டமாக 230 ஏக்கர் நிலத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில், 156 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்டுடியோவும், 21 ஏக்கர் நிலத்தில் திரைப்படக் கல்வி நிறுவனமும் கட்டப்படும். மீதமுள்ள 74 ஏக்கர் வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

முதற்கட்டமாக 230 ஏக்கர் நிலத்தில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில், 156 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்டுடியோவும், 21 ஏக்கர் நிலத்தில் திரைப்படக் கல்வி நிறுவனமும் கட்டப்படும். மீதமுள்ள 74 ஏக்கர் வணிக நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இந்த கட்டுமானத்திற்கான ஏலம் இந்த மாதம் அறிவிக்கப்படும். ஏலத்தில் வெற்றி பெற்றவர் கட்டுமான பணிகளை தொடங்கலாம்.
கட்டுமானங்கள் முழுமையடைந்து முழு சிட்டியும் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் அதிலிருந்து வரும் வருவாயை 7 ஆண்டுகளுக்கு அரசாங்கத்துடன் கட்டுமான நிறுவனம் பகிர்ந்துக்கொள்ள அவசியமில்லை. அதன் பின்னர் அரசுடன் ஒத்துழைத்து பகிர்ந்துக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு அம்மாநில மக்கள் வரவேற்பளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications