யோகிதான் பெஸ்ட்.. கொரோனா பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தினார்.. உ.பியில் பிரதமர் மோடி பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச அரசு கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டது, முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார் என்று பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ. 1500 மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் மக்கள் முன்னிலையில் பேசினார்.

வாரணாசியில் மிகப்பெரிய கான்பிரன்ஸ் ஹால் ஒன்றையும் திறந்து வைத்தார். ருத்ராக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்ட இந்த கான்பிரன்ஸ் ஹால் ஜப்பான் உதவியுடன் கட்டப்பட்டது. 1200 பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமாக சிவலிங்க வடிவத்தில் இந்த கான்பிரன்ஸ் ஹால் கட்டப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த நிலையில் வாரணாசியில் மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, உத்தர பிரதேச அரசு கொரோனா பரவலை சிறப்பாக தடுத்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தியதில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மிக சிறப்பாக, ஆக்கபூர்வமாக செயல்பட்டார். ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவிற்கு யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் இருந்தது.

 கேஸ்கள்

கேஸ்கள்

தொடக்கத்தில் தினமும் 30000 க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வந்த உத்தர பிரதேசத்தில் மொத்தமாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு எதிராக மாநில அரசு சிறப்பான திட்டங்களை வகுத்து அதை நன்றாக செயல்படுத்தி உள்ளது. கொரோனா பரவலுக்கு எதிரான அரசின் செயல்பாடு பாராட்ட தகுதி வாய்ந்த ஒன்று.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்


உத்தர பிரதேச அரசுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் நன்றி. இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில்தான் அதிக பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. எல்லோருக்கும் வேக்சின், எல்லோரும் இலவச வேக்சின் என்பதே எங்களின் நோக்கம். அதை சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம். உத்தர பிரதேசத்தில் மாபியாக்களின் ராஜ்ஜியத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

குடும்ப

குடும்ப

குடும்ப ஆட்சிகளுக்கும், கொள்ளை ஆட்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வளர்ச்சிக்கான ஆட்சி நடந்து வருகிறது. ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச அரசிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிராக தவறாக சின்ன பார்வை பார்த்தால் கூட அவர்களை அரசு தண்டிக்கும்.

சட்ட ஒழுங்கு

சட்ட ஒழுங்கு

உத்தர பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. மக்கள் பாதுகாப்பாக உணரும் காலம் வந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டை மக்கள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் கூட்டமாக வெளியே செல்வதை குறைக்க வேண்டும், பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+