46 வயது ஆணுக்கு இரனியா ஆபரேஷன் செய்த போது மருத்துவர்கள் அதிர்ச்சி! உள்ளே என்ன இருந்தது தெரியுமா?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஆண் ஒருவருக்கு இரணியா எனப்படும் குடல் இறக்க ஆபரேஷன் செய்த போது அவர் உடலில் இருந்த உள்ளுறுப்புகளை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்கிர் மிஸ்திரி (46). இவருக்கு கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி இருந்தது. இதையடுத்து மிஸ்திரி, மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர் நரேந்திர தேவ் என்பவர் பரிசோதனை செய்து சிடி ஸ்கேன் செய்தார்.

அப்போது மிஸ்திரிக்கு இரணியா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக இரணியா ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி, மிஸ்திரியின் பிறப்புறுப்புக்கு உள்பகுதியில் வளர்ச்சியடையாத கர்ப்பப்பையும், கருமுட்டைகளும் இருந்தன. இதையடுத்து அவருக்கு இரனியா ஆபரேஷன் செய்யப்பட்டதை அடுத்து அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த கருப்பைதான் உள்ளுறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து இரனியாவாக மாறிவிட்டது. பிறவியிலேயே இது போன்று பிரச்சினை இருந்துள்ளது. ஆனால் அவருக்கு பெண் போன்ற அம்சங்கள் ஏதும் இல்லை. அவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது போன்று வினோதமான விஷயங்கள் நடந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் மத்திய பிரதேசத்தில் 60 வயது விவசாயி ஒருவருக்கு 16 இன்ச் அளவுள்ள சுரைக்காய் அவருடைய மலக்குடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்த சுரைக்காயை 2 மணி நேரம் அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் அகற்றினர். இந்த சுரைக்காயால் விவசாயியின் உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டது. வயிற்றுவலியுடன் வந்த விவசாயிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போதுதான் சுரைக்காய் இருந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications