பேய் இருக்கா? இல்லையா? 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழும் ஆண்.. காரணத்தை கேட்டா அதிர்ந்து போவீங்க!
லக்னோ: உத்தர பிரதேசத்தில 3 திருமணம் செய்த ஆண் ஒருவர் 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். இதன் பின்னணியில் பேய் பற்றிய பயம் தான் காரணம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்வி நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் இனி எப்போதும் வரமாட்டார் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதேவேளையில் இன்னொரு தரப்போ, ஒருவர் இறந்துவிட்டால் அவர் நேசித்த மனிதர்களை காண இறந்த நபரின் ஆன்மா வந்து செல்லும் என்கின்றனர். அதோடு பேய் என்பது இருப்பதாக சிலர் கதைகளை கூறி வருகின்றனர்.
இதனால் தான் இப்போது வரை பேய் இருக்கா? இல்லையா? என்பதற்கு விடை தெரியாமல் உள்ளது. இதற்கிடையே தான் பேய் பயத்தில் ஒருவர் கடந்த 36 ஆண்டுகளாக ஆண் ஒருவர் பெண்ணாக மாறி வாழ்ந்து வரும் செய்தி வெளியாகி உள்ளது. அந்த நபர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர் சிந்தா. இவர் தான் கடந்த 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். இவர் 3 திருமணங்கள் செய்தார். மொத்தம் 9 மகன்கள் பிறந்தனர். இதில் 7 பேர் இறந்துவிட்டனர். 2வது மனைவியும் இறந்துவிட்டார். 2வது மனைவி இறந்த பிறகு சிந்தா பெண் போல் ஆடைகள் அணிய தொடங்கினார்.
அதாவது சிந்தா கையில் வளையல், திருமணம் ஆன பெண் போல் நெற்றியில் குங்குமம், கழுத்தில் பெண்கள் அணியும் ஆபரணங்கள், சேலை அணிந்து நடமாடி வருகிறார். இவர் கடந்த 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார். இதுபற்றி சிந்தாவிடம் கேட்டபோது, ‛‛எனது 2வது மனைவி மறைந்துவிட்டார். அவரது மறைவுக்கு பிறகு தான் நான் இப்படி மாறினேன். அவரது ஆன்மா என் கனவில் வந்து தொல்லை தந்தது.
அந்த ஆன்மா என்னை பெண் போல் வாழ வேண்டும் என்று கூறியது. இதனால் தான் பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறேன். எனக்கு மொத்தம் 9 மகன்கள். இதில் 7 பேர் இறந்துவிட்டனர்'' என்றார். அதாவது இறந்த 2வது மனைவி கனவில் வந்து பெண் போல் வாழ வேண்டும் என்று கூறிய நிலையில் அதை செய்யாவிட்டால் இறந்து விடுவோமோ? என்ற எண்ணம் சிந்தாவுக்கு வந்துள்ளது. இதையடுத்து தான் அவர் கடந்த 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வருகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications