பெண்களுடன் உல்லாசம்.. எம்ஜிஆர் கால டெக்னிக்கில் 20 பேரை ஏமாற்றிய நபர்.. யார் இந்த தியாகி? ஷாக்
லக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் எம்ஜிஆர் கால டெக்னிக்கை பயன்படுத்தி 4 மாநிலங்களை சேர்ந்த கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவரை விட்டு பிரிந்த பெண்களை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நபர் யார்? அவர் எப்படி பெண்களை ஏமாற்றினார்? என்பது பற்றிய போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நவ்சாத் தியாகி. இவர் மீது பெண் ஒருவர் நாகர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நவ்சாத் தியாகி போலீஸ் எனக்கூறி தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக தெரிவித்து இருந்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் நவ்சாத் தியாகியை பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது: நவ்சாத் தியாகி பல பெண்களை ஏமாற்றி உடலுறவு வைத்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக போலீஸ் கான்ஸ்டபிள் என்று கூறி கணவன்களை இழந்த பெண்கள் அல்லது கணவரை விட்டு பிரிந்த பெண்களை குறிவைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவர்களிடம் இருந்து ஆபாச போட்டோக்களை வாங்கி உள்ளார்.
நவ்சாத்தின் நண்பர், மத்திய பிரதேசத்தில் போலீசாக உள்ளார். அவரது உடையை அணிந்து போலீஸ் என்று தன்னை அடையாளப்படுத்தி உள்ளார். இதனால் பெண்கள் அவரை நம்பி உள்ளனர். பெண்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு அவர் அவர்களுடன் உறவு வைத்துள்ளார். இப்படியாக மொத்தம் 18 முதல்20 பெண்களை அவர் ஏமாற்றி உள்ளார். 10 பெண்களுடன் உடலுறவு வைத்துள்ளார்.
இவர் உத்தரபிரதேசத்தில் காசியாபாத், புலண்டசார், மதுரா, சாம்பல், முசாபர்நகர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் பெண்களை ஏமாற்றி உள்ளார். இதுதவிர டெல்லி, அசாம், மேகலாயா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெண்களையும் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். கைதான நவ்சாத் தியாகி 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். போலீஸ் துறையுடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை'' என்றனர்.
இதுதொடர்பாக முசாபர்நகர் சீனியர் எஸ்பி சஞ்சய் குமார் வர்மா கூறுகையில், ‛‛ கைதான நபர் போலீஸ் உடை அணிந்து பெண்களை ஏமாற்றி உள்ளார். முதலில் நண்பர் போல் பழகி அதன்பிறகு அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் சில போலீசாருடன் அவர் வேண்டும் என்றே நெருக்கமாக பழகி உள்ளார். ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடுவதை போட்டோவாக எடுத்து பெண்களை ஏமாற்ற அதனை பயன்படுத்தி உள்ளார். இவர் தனியாக வாழும் பெண்களை குறிவைத்து ஏமாற்றி உள்ளார்'' என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications