அது எப்புடி திமிங்கலம்! தலையில் சமோசா பிளேட்! டிராபிக்கில் பைக்கில் ரைடு! கூஸ்பம்ப் வீடியோ!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தட்டு முழுக்க சமோசாக்களை தலையில் வைத்துக் கொண்டு அதை பிடிக்காமலேயே இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. அதெப்படி அத்தனை டிராபிக்கில் தலையில் இருக்கும் தட்டை பிடிக்காமலேயே அவர் செல்கிறார் என பலர் ஆச்சரியத்துடன் வீடியோவை கடந்து செல்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கு ஒரு திறமை இருக்கும். அதை தனது பணியில் காட்டுவார்கள். ஐடி பணி, காவல் பணி, ஆசிரியர் பணி, மருத்துவ பணி, தூய்மை பணி என்றில்லை, ஹோட்டல் பணியிலும் மனம் இருந்தால் திறமையை காட்டலாம்.

1964-ல் வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் நடிகர் நாகேஷ் ஹீரோவாக நடித்திருப்பார். அவர் அந்த படத்தில் சர்வராக நடித்திருப்பார். அதில் காபி டபரா செட்டுகளை உயரமாக அடுக்கிக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பார்.
அது போல் 1980-களில் வெளியான படங்களில் உணவு பிளேட்டுகளை வரிசையாக அடுக்கிக் கொண்டு போய் பரிமாறுவார்கள். அண்மையில் நீருக்கு அடியில் ஹோட்டல், உயரமான இடத்தில் ஹோட்டல் என வந்துவிட்டது.
அது போல் தாய்லாந்தில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் மேஜிக் செய்வார். அவர் கொடுக்கும் கோன் ஐஸ்கிரீமை நாம் வாங்கும்போது நமக்கு வெறும் கோன் மட்டும் வரும். ஐஸ்கிரீம் இருக்கும் கோன் அவரிடம் இருக்கும். இது போல் மீண்டும் மீண்டும் நமக்கு சிரிப்பை வரவழைக்கும்.

அது போல் தற்போது நிறைய ஹோட்டல்களில் ரோபோக்கள் உணவு சப்ளை செய்யும் நிகழ்வும் நடக்கின்றன. இது வாடிக்கையாளர்களை கவரும் ஒரு கலை. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் ஒருவர் தனது தலையில் சமோசா அடுக்கப்பட்ட பெரிய தட்டை வைத்துக் கொண்டு பைக்கை ஓட்டுகிறார்.
அதிலும் முழுக்க முழுக்க மக்கள் நடமாட்டம் உள்ள, டிராபிக் நிறைந்த ஒரு தெருவில்! இது எப்படி சாத்தியம்? அதிலும் கொஞ்சம் கூட அந்த தட்டை அவர் பிடிக்காமல் ஓட்டி வருகிறாரே என பலர் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கிறார்கள்.
டிராபிக்கிலும் தலையில் சமோசா தட்டை பேலன்ஸ் செய்து பைக்கை ஓட்டிச் செல்லும் நபர்! | Video Credits: saba.ansari892#Traffic #Diwali2025 #ViralWatch #Samosa #Oneindia #TamilOneIndia pic.twitter.com/ZzKZgDZOws
— Oneindia Tamil (@thatsTamil) October 17, 2025
சாலையில் எத்தனை வண்டிகள் போனாலும் கொஞ்சமும் அசராமல் அவர் செல்லும் காட்சிகளை மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். ஒரு சிலர் இப்படி ஓபனாக சமோசாவை எடுத்துச் செல்வதால் எங்கிருக்கும் தூசு, துரும்பும் அதில்தானே ஒட்டிக் கொண்டிருக்கும் என ஹைஜீன் விஷயத்தில் கவலை கொள்கிறார்கள்.
நெட்டிசன் ஒருவர், சாலைகள் நன்றாக இருப்பதால் அவரால் சமோசாவை பத்திரமாக கொண்டு செல்ல முடிகிறது. ஆனாலும் அதை மூடிக் கொண்டு சென்றிருக்கலாம். இது போல் பரேலியில் மட்டும்தான் செய்ய முடியுமா என இன்னொரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications