Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண் போலீஸை அடிப்பியா? தாக்கியவரை என்கவுண்ட்டரில் போட்டு தள்ளிய போலீஸ்! உத்தர பிரதேசத்தில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் ரயிலில் பெண் போலீசை கொடூரமாக தாக்கிய நபரை போலீசார் அதிரடியாக என்கவுண்ட்டர் செய்தனர். இதில் அவர் பலியான நிலையில் அவரது கூட்டாளிகள் 2 பேர் குண்டு காயமடைந்த நிலையில் சம்பவத்தின்போது நடந்த துப்பாக்கிச்சண்டை குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜ்சங்கம் வரை சரயு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி இந்த ரயிலில் பெண் போலீஸ் பயணித்தார். அப்போது அவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.

Uttar Pradesh man who attacked Woman police on train, now killed in Encounter

இதில் அந்த பெண் முகம், தலையில் பலத்த காயமடைந்தார். ரத்த வெளத்தில் அவர் ரயிலியில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியது. மேலும் இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்தது. அதோடு இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸ் மற்றும் உத்தர பிரதேச அரசை கடுமையாக நீதிமன்றம் சாடியது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் போலீசின் சகோதரர் கொடுத்த புகாரில் அயோத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடிவந்தது. இந்த விசாரணையின்போது அனீஷ் கான் என்பவர் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் தான் அவர் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். சிறப்பு அதிரடி படையினர் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அனிஷ் கான் உள்பட 3 பேர் இருந்தனர். போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் தற்காப்புக்காக போலீசாரும் துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் அனீஷ் கான், ஆசாத், விசாம்பர் தயால் உள்ளிட்ட 3 பேரும் குண்டுகாயமடந்த நிலையில் போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தபோது அனீஷ் கான் இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அயோத்தி சீனியர் எஸ்பி ராஜ் கரண் நயார் கூறுகையில், ‛‛நாங்கள் தொழில்நுட்பம் மற்றும் ரகசிய தகவல் அடிப்டையில் அவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தோம். அதோடு தாக்குதல் நடத்தியவரை போட்டோ மூலம் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அடையாளம் காட்டினார்.
அதனடிப்படையில் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது போலீசாரை துப்பாக்கியால் சுட்டதால் வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். 2 பேர் காயமடைந்துள்ளனர். அதோடு போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்துள்ளார்'' என்றார். ரயிலில் பெண் போலீஸ் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் போலீசார் என்கவுண்ட்டரில் இறந்திருப்பது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு பிற ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+