Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தர பிரதேசத்திற்கு புதிய தலைவர்.. பாஜக களமிறக்கிய மூத்த அமைச்சர்.. 2024 தேர்தலுக்கு வியூகம்?

உத்தர பிரதேசத்திற்கு புதிய தலைவர்.. பாஜக களமிறக்கிய மூத்த அமைச்சர்.. 2024 தேர்தலுக்கு வியூகம்?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மாநில பாஜகவின் புதிய தலைவராக அமைச்சர் பூபேந்திர சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ஜாட் சமூகத்தின் தலைவராக இருக்கும் பூபேந்திர சவுத்ரி, நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த நிலையில் தற்போது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜாட் சமூகம் மாநிலம் முழுவதும் சுமார் 25 இடங்களில் செல்வாக்கு பெற்றுள்ள சமூகமாகும் இருக்கும் நிலையில் இந்த சமூகத்தை சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கவணிக்கத் தக்கதாக உள்ளது.

இதற்கு முன்னதாக தலைவராக பணியாற்றிய ஸ்வதந்தர் தேவ் சிங் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது பூபேந்திர சவுத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 தேர்தல்

தேர்தல்

சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. ஆனால் கடந்த தேர்தலை விடவும் இந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம் சற்று குறைந்து காணப்பட்டது. எனவே கட்சியை மீண்டும் பலப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக மேலிடம் முடிவெடுத்து சில மாற்றங்களை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கருத்தில் கொண்டு தற்போது மாநிலத்தின் கட்சித் தலைவர் பொறுப்பில் உள்ளவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

செல்வாக்கு

செல்வாக்கு

அதன்படி, ஏற்கெனவே தலைவராக இருந்த ஸ்வதந்தர் தேவ் சிங்கிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டு தற்போது அமைச்சராக இருக்கும் பூபேந்திர சவுத்ரி கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாட் சமூகத்தின் தலைவராக இருக்கும் பூபேந்திர சவுத்ரி, நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த நிலையில் தற்போது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜாட் சமூகம் மாநிலம் முழுவதும் சுமார் 25 இடங்களில் செல்வாக்கு பெற்றுள்ள சமூகமாகும்.

 மூன்றாவது மாநிலம்

மூன்றாவது மாநிலம்

முதலமைச்சர் ஆதித்யநாத் கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சவுத்ரியை கட்சியின் மாநிலத் தலைவராக நியமிப்பதன் மூலம் பிராந்திய சமநிலையை பாஜக எதிர்பார்க்கிறது. இவ்வாறு ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் கட்சியின் தலைவர்களாக நியமிக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே ஹரியானாவில் ஓபி தங்கர் மற்றும் ராஜஸ்தானில் சதீஷ் பூனியா ஆகியோர் கட்சியின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாட் சமூகத்தின் தலைவர்களாவார்கள்.

தகவல்

தகவல்

கடந்த 2016ல் உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் வரை அவர் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக பணியாற்றியுள்ளார். பாஜக அடிக்கடி சொல்வதைப்போல 'டபுள் இன்ஜின்' அரசாங்கம் மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் உடனடியாக அமல்படுத்தி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதளவில் உதவும் என்கிற வாத்தின் அடிப்படையில் அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் அதை கொண்டு சேர்க்க இப்படியான அதிரடி மாற்றங்கள் இன்றியமையாதது என கட்சியின் உயர்மட்டக்குழு கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+