உபியில் புல்டோசர் நடவடிக்கைக்கு நடுவே.. யோகி படத்தை டாட்டூ போட்ட முஸ்லிம் இளைஞர்.. எங்கே தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு எனக்கூறி முஸ்லிம்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வரும் நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவத்தை முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது நெஞ்சில் டாட்டூவாக குத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் யோகி ஆதித்யநாத்தின் தீவிர ரசிகன். அவர் தான் என் வழிகாட்டி. இது அவருக்கான பிறந்தநாள் பரிசு'' என அவர் கூறியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 2 முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். சமீப காலமாக நாட்டில் மதம் சார்ந்த பிரச்சனைகள், சர்ச்சைகள், கருத்து மோதல்கள் தொடர்ந்து வருகின்றன.
இதுதொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறைகளும் அரங்கேறி வருகின்றன. இதனால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தொடரும் சர்ச்சைகள்
சமீபத்தில் கூட பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா டிவி விவாதத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பேசியது சர்ச்சையானது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அருகே ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பான விவாதத்தில் தான் நுபுர் சர்மா பேசி சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

வன்முறைகள்
கத்தார், குவைத், பாகிஸ்தான் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் வரிசையாக வந்து இந்தியாவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தன. மேலும், கத்தார் மன்னிப்பு கோர வலியுறுத்தியது. இது ஒருபுறம் இருக்க இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு முஸ்லிம் மக்கள் போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டம் சில இடங்களில் வன்முறையானது.

உத்தர பிரதேசத்தில் வன்முறை
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த போராட்டம் வன்முறையானதில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 2 முஸ்லிம்கள் பலியாகினர். அதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் சரன்பூர், பிரக்யாராஜ் உள்பட 6 இடங்களில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை 300க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புல்டோசர் நடவடிக்கை
அதோடு வன்முறையை தூண்டியவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. 2வது முறை ஆட்சிக்கு வந்தது முதல் இது தொடர்ந்து வருகிறது. இதில் முஸ்லிம்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருப்பினும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசு புல்டோசர் நடவடிக்கையை கைவிடவில்லை. மாநிலத்தில் வன்முறையை தூண்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தனியார்,பொதுச்சொத்துகளுக்கான சேதத்தையும் அவர்களிடம் இருந்தே வசூலிக்கப்படுவதோடு, புல்டோசர் நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

யோகியை டாட்டூ குத்திய முஸ்லிம் இளைஞர்
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் பருகாபாத் மற்றும் மெயின்புரி மாவட்டத்தின் எல்லையில் வசிக்கும் யமின் சித்திக் (வயது 23) என்ற முஸ்லிம் இளைஞர் ஒருவர் பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உருவத்தை தனது நெஞ்சில் டாட்டூவாக குத்தியுள்ளார். நெற்றியில் குங்குமத்துடன், காவி உடை அணிந்து சிரித்த முகத்துடன் யோகி ஆதித்யநாத்தின் உருவம் அவரது நெஞ்சில் டாட்டூவாக பொறிக்கப்பட்டுள்ளது.

நேரில் சந்திக்க ஆசை
இதுபற்றி காலணி விற்பனை செய்து வரும் யமின் சித்திக் கூறுகையில், ‛‛யோகி ஆதித்யநாத் தான் எனது வழிக்காட்டி. நான் அவரது தீவிர ரசிகன். அவரது பிறந்தநாளையொட்டி எனது நெஞ்சில் யோகி ஆதித்யநாத்தின் உருவத்தை பச்சை குத்தியுள்ளேன். இதுதான் அவரது பிறந்தநாள் பரிசாகும். இதுபற்றி நண்பர்கள், உறவினர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். இருப்பினும் அதுபற்றி நான் கவலைப்படவில்லை. நான் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது. இந்த சந்திப்பின்போது டாட்டூவை அவரிடம் காண்பிக்க விரும்புகிறேன்'' என்றார்.
Recommended Video

பிறந்தநாள் எப்போது?
உத்தர பிரதேச முதல்வராக உள்ள யோகி ஆதித்யநாத்துக்கு ஜூன் 5 பிறந்தநாளாகும். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய யோகி ஆதித்யநாத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தான் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அவரது உருவத்தை நெஞ்சில் டாட்டூவாக குத்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications