விபத்து பலியை தடுக்க.. நெடுஞ்சாலைகளில் 50 கிமீ இடைவெளியில் முதலுதவி மையம்.. உத்தர பிரதேச அரசு பிளான்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் முதலுதவி மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினமும் வாகன விபத்துகள் நடந்து பலர் பலியாகி வருகின்றனர். ஏராளமானவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புகின்றனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் பயங்கரமான விபத்துகள் நடந்து கொத்து கொத்தாக மக்கள் பலியாவது அவ்வப்போது நடக்கிறது.

இந்நிலையில் தான் விபத்துகளை குறைக்கவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றன. இதற்கு உத்தர பிரதேசமும் விதிவிலக்கல்ல.
உத்தர பிரதேசத்தில் மட்டும் கடந்த 2019 முதல் 2022ம் ஆண்டு வரை நெடுஞ்சாலைகளில் மொத்தம் 14,900 விபத்துகள் நடந்துள்ள நிலையில் 8,479 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக 2022ம் ஆண்டில் மட்டும் 6,011 பேர் தேசிய நெடுஞ்சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்நிலையில் தான் உத்தர பிரதேசத்தில் விபத்து மற்றும் பலி எண்ணிக்கையை குறைக்க அம்மாநில அரசு சிறப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கிலோமீட்டருக்கும் emergency stabilisation centres அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கு சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நெடுஞ்சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில் தான் தாமதம் ஏற்படுகிறது. ஆனால் இந்த மையங்கள் அமைக்கப்படும்போது விபத்தில் சிக்கியவருக்கு உடனடியாக உதவி என்பது கிடைக்கும். இதனால் பலியாவோரின் எண்ணிக்கை குறையும்.
இதற்கான திட்டம் தற்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் மூலம் தீட்டப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை மாநில சாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கப்படும். அவர் ஒப்புதல் வழங்கும் நிலையில் இந்த மையங்கள் அமைக்கப்படும். இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‛‛மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இத்தகைய மையங்கள் அமைக்கும்படி கேட்டு கொள்கிறோம்'' என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications