13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்! பிளான் போட்டு கொடுத்த அக்கா! தகாத உறவை தட்டிக் கேட்டதால் கொடூரம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ள கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவம் நாட்டையே அதிரச் செய்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பிட்ட சில வடமாநிலங்களில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சமீப காலங்களாகச் சிறார்கள் மீதான பாலியல் குற்றங்களும் அதிகரித்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அப்படியொரு சம்பவம் தான் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் கரும்புக் காட்டில் 13 வயது சிறுமியின் உடல் கிடந்துள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அதிர்ச்சி தகவல்

அதிர்ச்சி தகவல்

சிறுமியின் உடலை முதற்கட்டமாக ஆய்வு செய்த போது, அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அது உறுதியானது. இதையடுத்து வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்திய போது போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் 7 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.

 கூட்டு பாலியல் பலாத்காரம்

கூட்டு பாலியல் பலாத்காரம்

13 வயதான அந்த சிறுமி கரும்பு காட்டில் வைத்து நான்கு பேர் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், துணியைக் கொண்டு அந்தச் சிறுமியின் கழுத்தை நெறித்தும் கொலை செய்துள்ளனர். இவை அனைத்தும் அந்தச் சிறுமியின் சகோதரியின் திட்டப்படி அவரது முன்னாலேயே நடந்துள்ளது என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தியாகும் கைது செய்யப்பட்ட 7 பேரில் 4 பேர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 தகாத உறவு

தகாத உறவு

போலீசார் அவர்களிடம் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில் மேலும் சில தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அச்சிறுமியின் மூத்த சகோதரி அந்த ஊரில் இருக்கும் 4 பேருடன் தகாத உறவில் இருந்து உள்ளார். இதைத் தெரிந்து கொண்ட அவரது தங்கை இது தொடர்பாக கேட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சகோதரிகளுக்கு இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் மூத்த சகோதரி இந்தத் திட்டத்தைப் போட்டுள்ளார்.

 அக்காவின் திட்டம்

அக்காவின் திட்டம்

அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் இயற்கை உபாதைக்குப் போக வேண்டும் எனக் கூறி தங்கையைக் கரும்பு காட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளார். அங்குத் தயாராக இருந்த 4 பேர், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தச் சமயத்தில் மூத்த சகோதரி மற்றும் வேறு இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை நடந்த போது, கரும்பு காட்டுக்கே வெளியே காவலுக்கு நின்று உள்ளனர்.

 கைது

கைது

இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் மூத்த சகோதரி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதையும் அவர் ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார். அதைத் தொடர்ந்தே மற்றவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 18-19 வயதானவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+