Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assembly Elections 2022 LIVE: வாக்குப்பதிவு நிறைவு:பஞ்சாப், உத்திரபிரதேசத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடனான கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று அகாலிதள் தெரிவித்துள்ளது.

பஞ்சாப்பில் காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடக்க உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துவிட்டது.

இதனையடுத்து 16 மாவட்டங்களில் உள்ள மேலும் 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும். இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Uttar Pradesh Third Phase and Goa & Uttarkhand Assembly Election Polling LIVE News Updates

Feb 20, 2022, 7:51 pm IST

உத்தரப்பிரதேசம் : ஹத்ராஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்ணின் குடும்பத்தை நாங்கள் சந்திக்க விடாமல் தடுக்க முழு போலீஸ் படையும் இருந்தது. அந்த பெண் கற்பழிக்கப்படும்போது காவல்துறையினர் எங்கே இருந்தார்கள்? தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக போலீசார் ரோந்து வருவதாகவும் குடும்பத்தினர் எங்களிடம் தெரிவித்தனர் - ரேபரேலியில் பிரியங்கா காந்தி வத்ரா ஆவேசம்
Feb 20, 2022, 7:50 pm IST

உத்தரப்பிரதேசம் : அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் உத்திரபிரதேசத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சமாஜ்வாதி கட்சி பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
Feb 20, 2022, 6:40 pm IST

உத்திர பிரதேசம் : உத்திர பிரதேசத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தகவல்.
Feb 20, 2022, 6:23 pm IST

பஞ்சாப் : பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் VVPATகளுக்கு வாக்குச்சாவடி அதிகாரிகள் சீல் வைக்கும் பணிகளை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மேற்கொண்டு வருகின்றனர்.
Feb 20, 2022, 6:17 pm IST

பஞ்சாப் சட்டசபை தேர்தல் : மாலை 5 மணி வரை பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் அதிக அளவாக 73.45% வாக்குகள் பதிவாகியுள்ளது
Feb 20, 2022, 6:10 pm IST

பஞ்சாப் சட்டசபை தேர்தல் மற்றும் உத்திர பிரதேசத்தில் 3ஆம் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இரு மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் சிறு சிறு பிரச்சினைகள் மட்டும் நடைபெற்றதாகவும், மற்றபடி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாக தகவல்
Feb 20, 2022, 5:59 pm IST

உத்திரபிரதேசத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சியின் நம்பிக்கை குறைந்துள்ளது. அகிலேஷ் யாதவ் குடும்பத்தினர் கர்ஹாலில் பிரச்சாரம் செய்ய வேண்டியிருந்தது. ஏராளமான வாக்காளர்கள் பிரதமர் மோடி அவர்களின் திட்டங்களால் பயனடைகிறார்கள். உ.பி.யில் யோகி அரசால் பெண்களுக்கு மரியாதையும் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
Feb 20, 2022, 5:51 pm IST

பஞ்சாப் : பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி மிகவும் உறுதியற்ற நிலையில் உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ள தொடர்பு தற்போது பஞ்சாப் மக்களுக்கு தெரியவந்துள்ளது. மொத்தத்தில், பஞ்சாப் மாநிலத்திற்கு சாதகமான வளர்ச்சியை அளிக்கும் ஒரே அரசு பாஜக மட்டுமே என பாஜக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேச்சு
Feb 20, 2022, 5:50 pm IST

உத்திரபிரதேச தேர்தல் : உத்தரபிரதேச மாநில மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 57.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
Feb 20, 2022, 5:50 pm IST

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் இதுவரை பஞ்சாபில் 5 மணி நிலவரப்படி 63.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்
Feb 20, 2022, 5:38 pm IST

பஞ்சாப் : பஞ்சாபில் மாலை 5 மணி வரை 62% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Feb 20, 2022, 5:36 pm IST

உத்திர பிரதேசம் : சமாஜ்வாதி கட்சி மக்களை கேலி செய்கிறது, அவர்களுக்கு உத்திரபிரதேசம் மற்றும் அதன் மக்களைப் பற்றி கவலை இல்லை என பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
Feb 20, 2022, 5:36 pm IST

சமாஜ்வாதி கட்சிக்கு அதிகாரம் மட்டுமே தேவை. அவர்களுக்கு அரசுப் பதவி ஏடிஎம் போன்றது என சமாஜ்வாதி கட்சி நினைப்பதாகவும், பாஜக அரசு மக்களுக்கு சேவை செய்கிறது என உன்னாவ் நகரில் பிரதமர் மோடி பிரச்சாரம்
Feb 20, 2022, 5:29 pm IST

ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் உ.பி. தேர்தல் முடிவுகள் பாதுகாக்கும்: அகிலேஷ் யாதவ்
Feb 20, 2022, 5:29 pm IST

பஞ்சாப் தேர்தல் : பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மலேர்கோட்லா மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக 57.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
Feb 20, 2022, 5:29 pm IST

அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள குற்றவாளிகளுக்கு சில கட்சிகள் ஆதரவு- பிரதமர் மோடி
Feb 20, 2022, 5:28 pm IST

உ.பி.யில் சமாஜ்வாதி ஆட்சியில் 14 பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன- பிரதமர் மோடி
Feb 20, 2022, 5:15 pm IST

மோகாவில் வாக்கு சாவடிக்குள் சோனு சூட் பார்வையிடுவதை தடுத்தது தேர்தல் ஆணையம்
Feb 20, 2022, 4:57 pm IST

இந்தியாவின் நவீன அவுரங்கசீப் அகிலேஷ் யாதவ்- ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான்
Feb 20, 2022, 4:50 pm IST

யோகி ஆட்சியில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்: பிரதமர் மோடி
Feb 20, 2022, 4:28 pm IST

உ.பி. ஃபைரோசாபாத்தில் மாலை 3 மணி நிலவரப்படி 51.09% வாக்குகள் பதிவு
Feb 20, 2022, 4:19 pm IST

ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் பச்சை பொய்யர்: பாஜகவின் மீனாக்‌ஷி லேகி
Feb 20, 2022, 3:58 pm IST

அகாலி தளம், பாஜக கூட்டணி எனும் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி
Feb 20, 2022, 3:56 pm IST

அகாலி தளம், பாஜக கூட்டணி எனும் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி
Feb 20, 2022, 3:39 pm IST

பஞ்சாப் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி 49.81% வாக்குகள் பதிவு
Feb 20, 2022, 3:23 pm IST

உத்தர பிரதேசம்: எதிர்கட்சியினர் உத்தர பிரதேச அரசியலில் ஜாதியை கையில் எடுத்துள்ளனர். மத்திய அரசில் ஒரு குடும்ப ஆட்சி இல்லை, இப்போது உத்தர பிரதேசத்தில் ஒரு குடும்ப ஆட்சி இல்லை, ஆனால் ஒரு குடும்பம் உத்தர பிரதேசத்தை ஆள துடிக்கிறது
Feb 20, 2022, 3:17 pm IST

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றால் மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்பட விட மாட்டார்கள் - பிரதமர் மோடி
Feb 20, 2022, 2:55 pm IST

பஞ்சாப்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் காரர் பகுதியில் உள்ள பூத்தில் வாக்களித்தார்
Feb 20, 2022, 2:46 pm IST

பஞ்சாப்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.10% வாக்குப்பதிவு
Feb 20, 2022, 2:40 pm IST

உத்தர பிரதேசம்: ஃப்ரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள பூத் எண் 38ல் உள்ள இவிஎம் எந்திரத்தில் சமாஜ்வாதி கட்சி சின்னம் இல்லாதது குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+