உ.பி.யில் கேப்பே விடாமல் வெளுத்த கன மழை.. வெள்ளத்தில் மிதக்கும் சட்டசபை- அவசரமாக வெளியேறிய யோகி!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அம்மாநில சட்டசபைக்குள் வெள்ளம் பாய்ந்தோடுவதால் முழங்கால் அளவு நீரில்தான் அதிகாரிகள் செல்ல வேண்டிய துயர நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர் கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இந்த வெள்ளத்தில் மிதந்தபடியே வாகனங்கள் ஊர்ந்தும் செல்கின்றன.
இதனிடையே லக்னோவில் மாநில சட்டசபை வளாகத்துக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தோடி உள்ளது. சட்டசபையின் கீழ்தளத்தில் முழங்கால் அளவு வெள்ள நீர் பாய்ந்தோடுகிறது. இதனால் இந்த கீழ் தள அலுவலகத்தில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
இந்த கனமழை வெள்ளம் சட்டசபைக்குள் பாய்ந்தோடும் போது முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தமது அறையில்தான் இருந்தார். இதனையடுத்து அவசரம் அவசரமாக வேறொரு வாசல் வழியாக பாதுகாவலர்கள் யோகி ஆதித்யநாத்தை வெளியே பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இதனிடையே உத்தரப்பிரதேச சட்டசபை வளாகத்துக்குள் புகுந்த வெள்ள நீரை பக்கெட்டுகளில் அள்ளி அதிகாரிகளும் ஊழியர்களும் வெளியே கொட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு முன்னர் சட்டசபைக்குள் வெள்ளம் பாய்ந்ததே இல்லை எனவும் அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் சிவபால் யாதவ், மாநில சட்டசபை வளாகத்தை மேம்படுத்த கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த வெள்ள பாதிப்பு சுட்டிக்காட்டுகிறது. ஒரே ஒரு கனமழைக்கே இப்படி வெள்ளத்தில் மிதக்கிற நிலைமையில்தான் சட்டசபை இருகிறது. சட்டசபை வளாகத்தில் இருந்து வெள்ள நீரை அகற்றுவதற்கு அனைத்து தரப்பும் முயற்சித்துக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது என பதிவிட்டுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications