தூக்குப் போட்ட மனைவி.. ஜாலியாக வீடியோ எடுத்த கணவன்.. காரணம் என்னவாம் தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மனைவி தூக்குப்போட்ட நிலையில் அதனை தடுக்காமல் கணவர் வீடியோ எடுத்து ரசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே கித்வாய் நகரை சேர்ந்தவர் ராஜ் கிசோர். இவரது மகள் சோபிதா. குல்மோகார் பகுதியை சேர்ந்த் சஞ்சீவ் குப்தா.
இந்நிலையில் தான் சோபிதா-சஞ்சீவ் குப்தா ஆகியோருக்கு திருமண நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

குடும்ப பிரச்சனை
திருமணம் முடிந்த வேளையில் இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதற்கிடையே தான் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப விஷயம் தொடர்பாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று சோபிதாவுக்கும், சஞ்சீவ் குப்தாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தற்கொலை செய்த மனைவி
இந்த வாக்குவாதத்தால் மனம் உடைந்த சோபிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டில் உள்ள கட்டில் மீது ஏறி மின்விசிறியில் தூக்குப்போட்டு துடிதுடித்தார். இதுபற்றி சஞ்சீவ் குப்தா, சோபிதாவின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய சோபிதாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோபிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

வீடியோ எடுத்த கணவர்
இதற்கிடையே தான் சோபிதா தற்கொலை செய்வதை தடுக்காமல் அதனை அவரது கணவர் சஞ்சீவ் குப்தா செல்போனில் வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. அந்த வீடியோவில், சோபிதா கட்டில் மீது பிளாஸ்டிக் சேரை போட்டுள்ள மின்விசிறியில் துப்பட்டாவை கட்டி தூக்கிட்ட சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி சோபிதாவின் தந்தை ராஜ்கிஷோர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார்.

சஞ்சீவ் குப்தா கைது
புகாரில், ‛‛என் மகளை ஏன் காப்பாற்றவில்லை என சஞ்சீவ் குப்தாவிடம் கேட்டேன். அதற்கு அவர் என் மகள் தற்கொலை செய்யும் வீடியோவை காட்டினார். தற்கொலை செய்யாதே என கூறியும் அவர் கேட்கவில்லை என கூறி வீடியோவை காண்பித்தார். எனது மகளின் தற்கொலைக்கு அவரது கணவர் தான் காரணம் '' என கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவ் குப்தாவை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பரவும் வீடியோ
இதற்கிடையே சோபிதா தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. பலரும் சஞ்சீவ் குப்தாவை கடுமையாக கண்டித்து வருகின்றனர். மனிதாபிமானமற்ற நபர் என விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபற்றி உதவி போலீஸ் கமிஷனர் அனுப் சிங் கூறுகையில் ‛‛சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீடியா ஆதாரத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தம்பதி இடையேயான பிரச்சனைக்கான காரணம் பற்றி விசாரித்து வருகிறோம்'' என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications