லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏய் நீ ரொம்ப குண்டா இருக்க.. மனைவியை பிரிய கணவர் செய்த செயல்.. உத்தர பிரதேச போலீஸ் தீவிர விசாரணை

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் திருமணத்துக்கு பிறகு மனைவி உடல் பருமன் அதிகரித்ததாக கூறி அவரை பிரிய கணவர் செய்த செயல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்துக்கு பிறகு கருத்து வேறுபாடு, சந்தேகம், புரிதல் இன்மை உள்ளிட்ட பல காரணங்களை கூறி சில தம்பதிகள் பிரிந்து வாழ்க்கை நடத்துகின்றனர். மேலும் சிலர் விவாகரத்து கோரி இன்னொரு பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதுஒருபுறம் இருக்க சிலர் விசித்திரமான காரணங்களை கூறி மனைவி அல்லது கணவரை பிரிய முடிவு செய்வார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

வீட்டிற்கு போனால் அடிவிழுது.. 80 அடி உயர மரத்தில் குடியேறிய கணவன்.. உத்தர பிரதேசத்தில் விநோதம்!வீட்டிற்கு போனால் அடிவிழுது.. 80 அடி உயர மரத்தில் குடியேறிய கணவன்.. உத்தர பிரதேசத்தில் விநோதம்!

 உத்தர பிரதேச தம்பதி

உத்தர பிரதேச தம்பதி

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் நஜ்மா பேகம் (வயது 28). இவருக்கும் முகமது சல்மான் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான புதிதில் இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தான் சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

 எடை அதிகரித்ததாக கூறி கொடுமை

எடை அதிகரித்ததாக கூறி கொடுமை

அதாவது நஜ்மா பேகம் உடல் எடை அதிகரித்து இருப்பதாக கூறி முகமது சல்மான் தொடர்ந்து குற்றம்சாட்டி துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் நஜ்மா பேகம் மனதளவில் பாதிக்கப்பட்டார். இருவரின் குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் கூட முகமது சல்மான் தனது நடவடிக்கையை மாற்றி கொள்ளவில்லை. தொடர்ந்து மனைவியை துன்புறுத்தி வந்துள்ளார்.

‛முத்தலாக்’ புகார்

‛முத்தலாக்’ புகார்

மேலும் மனைவியைவிட்டு பிரிந்து செல்ல முகமது சல்மான் முடிவு செய்தார். இதனால் அவர் தனது மனைவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். மேலும் அவர் ‛முத்தலாக்' கூறியுள்ளதாக கூறப்படுகிறது இதனால் மனம் உடைந்த நஜ்மா பேகர் சம்பவம் குறித்து போலீசில புகார் செய்தார்.

 விரைவில் கைது

விரைவில் கைது

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நஜ்மா பேகத்தின் கணவர் முகமது சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி கோட்வாலி மீரட் சர்க்கிள் போலீஸ் அதிகாரி அரவிந்த் குமார் சவுராசியா கூறுகையில், ‛‛இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கைது செய்வோம்'' என்றார்.

English summary
Uttar Pradesh Meerut Woman Has Alleged that her husband pronounced ‛triple talaq’ since she had been gaining weight after marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X