கருநாகமும் கீரிப்பிள்ளையும்! சாலையில் செம சண்டை! கடைசியில் ட்விஸ்ட்! வைரலாகும் வீடியோ
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், அவுரியாவில் ஒரு கருநாகப்பாம்பும், ஒரு கீரிப்பிள்ளையும் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த காட்சியைக் கண்ட நெட்டிசன்கள் வீடியோ எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏன்தான் பாம்பும் கீரியும் சண்டையிடுகின்றன என்பதை பார்க்கலாம். பொதுவாக காடுகள், புதர்களில்தான் இவை சண்டையிடுமாம், ஆனால் தற்போது சாலையிலேயே இவை சண்டையிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுக்கு எதிரிகள் உருவாவது போல விலங்குகளுக்கும் எதிரிகள் உண்டு. உதாரணமாக, பூனை - எலி, கீரி - பாம்பு, பருந்து - பாம்பு, புலி - மான் என சொல்லிக்கொண்டே போகலாம். இவை ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும்; சில, பலவீனமான விலங்கை உட்கொள்ளவும் செய்யும்.

அந்த வகையில், கருப்பு நாகப்பாம்பும், ஒரு கீரியும் கடுமையாக மோதிக்கொள்ளும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அவுரியா சதார் கோட்வாலி எனும் பகுதியில்தான் நடந்தது.
பாம்புகளும் கீரிகளும் பரம எதிரிகள் என்பது அனைவரும் அறிந்ததே. இவை இரண்டும் நேருக்கு நேர் சந்தித்தால் நிச்சயம் சண்டை ஏற்படும். இது தவிர்க்க முடியாத சண்டையாகும். பாம்பை உணவாக உட்கொள்ள கீரி முயற்சிக்கும். ஆனால், அந்த கீரியிடம் இருந்து தனது உயிரைக் காக்க, பாம்பு தப்பி ஓடும்.

ஆனாலும், கீரி விடாமல் துரத்திச் சென்று பாம்பைக் கடித்துக் கொல்வதற்குத் துரத்தும். இதுபோன்ற தாக்குதல்களின்போது கீரிகள் தாக்க, பாம்புகள் இறக்கும். கீரிகளுக்கு லேசான காயங்களே ஏற்படும். சில நேரங்களில் இரண்டுமே இறக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். அதன் விஷம் ஆளையே கொல்லும். கீரி மட்டும் எப்படித் தைரியமாகப் பாம்புடன் சண்டையிடுகிறது என நீங்கள் கேட்கலாம். எத்தனை கொடிய விஷமுள்ள பாம்புகளாக இருந்தாலும் அவற்றின் விஷம் கீரியை ஒன்றும் செய்யாது. கீரியின் உடலில் பாம்பின் விஷத்தைத் தாங்கக்கூடிய ஏராளமான ஆன்டிபாடிகள் உள்ளன.

பாம்பு கடித்த பிறகு, கீரிகள் மயக்கத்தில் இருக்கும். பிறகு அவை இயல்பு நிலைக்குத் திரும்பும். கீரிகள் மிகவும் புத்திசாலிகள். மயக்கத்தில் இருப்பதுபோல் நடித்து, உடனே பாம்புகளைக் கவ்விப் பிடிக்கும். அவற்றைத் துண்டு துண்டாக்கி கிழித்துச் சாப்பிடும்.
உத்தரப்பிரதேசத்தில் அவுரியா பகுதியில் ஒரு பாம்பும், ஒரு கீரியும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. சாலையில் நடந்த இந்தச் சண்டையைப் பார்க்க, வாகன ஓட்டிகள் அப்படியே நின்று பார்த்திருந்தனர். இதைத் தொடர்ந்து, சிறிது நேரம் சண்டையிட்ட கீரி, மனித நடமாட்டத்தைப் பார்த்ததும் புதருக்குள் சென்றுவிட்டது.

புதருக்குள் போனால் கீரியிடம் சிக்கிவிடுவோம் எனக் கருதிய பாம்பு, மனித நடமாட்டத்தைப் பார்த்துப் பதுங்காமல் சாலையிலேயே இருந்தது. இதை வாகன ஓட்டிகள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். கீரிகளுக்கு பாம்புகளை பார்த்தாலே எங்கிருந்துதான் ஆக்ரோஷம் வருமோ தெரியவில்லை. இதற்காகவே கீரிப்பிள்ளையின் பிள்ளைகளை (குட்டிகள்) பாம்புகள் பார்த்தால் விடாமல் விழுங்கிவிடுமாம்.
கீரி மிகவும் வேகமாக செயல்படும், ஓட கூடியதும் கூட! இதனால் கீரியின் வேகம், பாம்புகளை காயமாக்கிவிடும் அல்லது கொன்றுவிடும். கீரிகள் மின்னல் வேகத்தில் செயல்படும் என்பார்கள்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications