உபியை அலற விட்டவர்.. மோடிக்கு எதிராக போட்டி வேறு! சுட்டு கொல்லப்பட்ட ஆதிக் அகமது! யார் இவர்? பின்னணி
லக்னோ: உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனால் உபியில் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.. யார் இந்த ஆதிக் அகமது அவரது குற்றப் பின்னணி மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்துப் பார்க்கலாம்.
உத்தரப் பிரதேசத்தின் முக்கிய ரவுடியான ஆதிக் அகமது, ஏற்கனவே வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருக்கிறார். இன்று அவரையும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதையும் போலீசார் பிரயாக்ராஜில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கே இருந்த செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களைப் போலக் காட்டிக் கொண்ட சிலர் மிக அருகே வந்து அவர்களைச் சுட்டுக் கொன்றனர்.

ஆதிக் அகமது: இதில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் பத்திரிக்கையாளர்கள் போலக் காட்டிக் கொண்டு சிலர் மிக அருகே வந்து அவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்துவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் சிலரைக் கைது செய்துள்ளனர்.
இதனால் உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உத்தர பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கே பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், லக்னோவின் ஹுசைனாபாத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அவசர கூட்டத்தை நடத்தியுள்ளார். இப்படி உத்தரப் பிரதேசத்தையே அதிர வைத்த இவர் யார்? இவரது பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
அரசியல் வாழ்க்கை: ஆதிக் அகமது உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1962ஆம் ஆண்டு பிறந்தவர். ரவுடியாக இருந்த அவர், திடீரென அரசியலிலும் குதித்தார். முன்னாள் எம்பியாகவும், ஐந்து முறை எம்எல்ஏவாகவும் இருந்த ஆதிக், தனது அரசியல் வாழ்க்கையை 1989ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது இவர் உ.பி.யின் அலகாபாத் மேற்கு தொகுதியில் இருந்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.
அவர் அடுத்த இரண்டு முறை நடந்த தேர்தல்களிலும் அவர் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.. இதையடுத்து சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்த அவர், 1996இல் தொடர்ந்து நான்காவது முறையாக அங்கே வென்றார். அதைத் தொடர்ந்து 1999இல், அப்னா தளம் (AD) கட்சியில் சேர்ந்த அவர் பிரதாப்கர் தொகுதியில் போட்டியிட்டார். இருப்பினும், அங்கே அவரால் வெல்ல முடியவில்லை. 2002இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அலகாபாத் மேற்கு தொகுதியில் அப்னா தளம் சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

கொலை வழக்கு: இதையடுத்து 2003இல் அவர் மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்குத் திரும்பினார். 2004இல், அவர் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் தொகுதியான புல்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்குப் பிறகு, 2005இல் ராஜு பால் என்பவர் கொலை செய்த வழக்கில் ஆதிக் அகமது குற்றஞ்சாட்டப்பட்டார்.
2005ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி தனது கூட்டாளிகள் சந்தீப் யாதவ் மற்றும் தேவி லால் ஆகியோருடன் மருத்துவமனையில் இருந்து திரும்பும் போது ராஜு பால் வீட்டிற்கு வெளியே வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைவிட்ட அரசியல் கட்சிகள்: அதன் பிறகு 2012 சட்டசபைத் தேர்தலில், ஆதிக் மீண்டும் புல்பூர் தொகுதியில் இருந்து அப்னா தளம் சார்பில் போட்டியிட்டார். இருப்பினும், அவர் பிஎஸ்பியின் புஜா பாலிடம் 8,885 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் ஷ்ரவஸ்தி தொகுதியில் சாமாஜ்வாடி கட்சி சார்பில் அவர் போட்டியிட்டார். இருப்பினும், அப்போதும் அவரால் வெல்ல முடியவில்லை.
அரசியல் மற்றும் போலீஸ் அழுத்தம் காரணமாக 2008இல் ஆதிக் சரணடைந்தார். 4 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் 2012இல் வெளியே வந்தார். பின்னர் அவர் 2014இல் சாமாஜ்வாடி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட போதிலும், அவரால் வெல்ல முடியவில்லை. அப்போது தான் சமாஜ்வாடி கட்சி உடனான அவரது உறவு மோசமடைந்தது.. ஆதிக்கின் குற்றி பின்னணி காரணமாக அகிலேஷ் யாதவ் ஆதிக்கிடம் இருந்து விலகத் தொடங்கினார்.
மோடிக்கு எதிராகப் போட்டி: இதனிடையே பிரயாக்ராஜில் உள்ள சாம் ஹிக்கின்பாட்டம் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களைத் தாக்கியதற்காகப் பிப்ரவரி 2017இல் அவர் கைது செய்யப்பட்டார். 2019இல் அவர் சிறையில் இருந்தபோதே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் ஆதிக் போட்டியிட்டார். இருப்பினும், அவரால் அந்த தேர்தலி்ல வெறும் 855 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
ராஜு பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியமாக இருந்த உமேஷ் பால் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதில் ஆதிக் அகமது அவரது சகோதரர் அஷ்ரப் உட்பட ஏழு பேர் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
மகன்கள்: ஆதிக் அகமதின் மகன்களில் ஒருவரான ஆசாத், உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார். அவரை ஜான்சியில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் சில நாட்களுக்கு முன்பு என்கவுன்டர் செய்தனர். அவரது மற்ற 4 மகன்களில் இருவர் வெவ்வேறு வழக்குகளில் உபி-இல் சிறையில் உள்ளனர். அதேபோல மற்ற இருவர் சிறார் இல்லத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு











Click it and Unblock the Notifications