Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தரப் பிரதேசத்தில் கட்சி தலைவரை பாஜக மாற்றியது ஏன்? சாதிய அரசியலா? தேர்தல் வியூகமா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவராக அமைச்சர் பூபேந்திர சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். ஜாட் சமூகத்தின் தலைவராக இருக்கும் பூபேந்திர சவுத்ரி, நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்த நிலையில் தற்போது தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜாட் சமூகம் மாநிலம் முழுவதும் சுமார் 25 இடங்களில் செல்வாக்கு பெற்றுள்ள சமூகமாகும். இந்நிலையில் இந்த சமூகத்தை சேர்ந்தவர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கவணிக்கத்தக்கதாக உள்ளது.

இதற்கு முன்னதாக தலைவராக பணியாற்றிய ஸ்வதந்தர் தேவ் சிங் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நிலையில் தற்போது பூபேந்திர சவுத்ரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தை கைப்பற்ற இந்த அதிரடி முடிவுகளை கட்சி மேற்கொண்டாதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் சாதியின் அடிப்படையில் தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தவே இவ்வாறு நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதாக மற்றொரு தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் நிலை என்ன? அங்கு பாஜக எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Why did BJP change party leader in Uttar Pradesh? Caste politics? Election strategy?

முதலமைச்சர் ஆதித்யநாத் கிழக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சவுத்ரியை கட்சியின் மாநிலத் தலைவராக நியமிப்பதன் மூலம் பிராந்திய சமநிலையை பாஜக எதிர்பார்க்கிறது என சொல்லப்படுகிறது. ஜாட் சமூகம் மாநிலம் முழுவதும் சுமார் 25 இடங்களில் செல்வாக்கு பெற்றுள்ள சமூகமாகும். இதனை கருத்தில் கொண்டே இந்த சமூகத்தின் தலைவராக உள்ள பூபேந்திர சவுத்ரி கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல சாதி அரசியல் குறித்த விமர்சனங்களை கட்சி மறுத்துள்ளது. மாநிலத்தில் கட்சி, சாதி அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவதாகவும் பல்வேறு பகுதிகளுக்கான பிரதிநிதித்துவத்தை சமநிலைப்படுத்துவதற்காக மேற்கு உ.பி.யைச் சேர்ந்த ஜாட் தலைவர் ஒருவர் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் ஏற்கெனவே கட்சியின் மாநில பொதுச் செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட தரம் பால் மேற்கு உ.பியை சேர்த்தவர்தான். எனவே இந்த பிரதிநிதித்துவம் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுவிட்டது என சிலர் கூறுகின்றனர்.

403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக 41.29% வாக்குகளுடன் 255 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க பாஜக தொடர்ந்து முயன்று வருகிறது. நிலைமை இப்படியாக இருக்க ஜாட் சமூகத்தின் செல்வாக்கு அதிகம் உள்ள பகுதியான மொராதாபாத்தில் பாஜக தனது செல்வாக்கை இழந்து வருவதாக கருதுகிறது.

இதற்கு 2019ல் அந்த பகுதியில் போட்டியிட்ட சவுத்ரி தோல்வியை தழுவியது ஓர் எடுத்துக்காட்டாக கட்சியினர் பார்க்கின்றனர். மட்டுமல்லாது, சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக ஜாட் சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கு எதிராக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அந்த சமூக மக்களை சமாதானப்படுத்த இந்த தலைவர் பதவியை ஜாட் சமூக தலைவரான சவுத்திரிக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் இதற்காக மட்டுமே சவுத்ரி தலைவராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், அவர் களப்பணியில் நன்கு ஈடுபடக்கூடியவர், மட்டுமல்லாது அமைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு அவருக்கு வேலை தெரியும் என்பதாலேயே இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என கட்சியினர் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை தலைவர்களாக நியமிப்பது உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல, ஏற்கெனவே ராஜஸ்தானிலும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனெினல் ராஜஸ்தானில் 15 முதல் 18 சதவீதம் ஜாட் மக்கள் உள்ளனர். இவர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஓட்டு வங்கியை அதிகரிக்க முடியும் என பாஜக நம்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். எனவே ராஜஸ்தானில் சதீஷ் பூனியா அம்மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோலவ ஹரியானாவில் ஓபி தங்கர் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே ஜாட் சமூகத்தின் தலைவர்களாக அறியப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+