பாபநாசம் பட பாணியில்.. 4 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்துக்கு வந்த கொலை.. மனைவி கைது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டிய கணவனை பெண் ஒருவர் கொன்று புதைத்துள்ள சம்பவம் 4 ஆண்டுகளுக்கு பின் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டெல்லியில் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து விட்டு திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஷ்ரத்தா என்ற பெண்ணை கொடூரமாக கொலை செய்தார் அவரது ஆண் நண்பர் அமீன் என்பவர்.

இந்த கொலையை மறைப்பதற்காக அமீன், ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி வனப்பகுதிக்குள் வீசியிருந்த சம்பவம் நேற்று வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

பாபநாச பட பாணியில்..

பாபநாச பட பாணியில்..

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து விட்டு 4 வருடமாக நாடகமாடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். பாபநாசம் பட பாணியில் உடலை தரையில் தோண்டி புதைக்கப்பட்ட சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொடூர கொலை சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால்

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால்

காசியாபாத்தின் சவிதா என்ற பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது கணவர் சந்திர விர் என்பவர் மாயமாகி விட்டதாக புகார் அளித்து இருந்தார். தனது புகாரில் தனது இளைய சகோதரர் மீது தான் குற்றச்சாட்டி இருந்தார். இந்த வழக்கை போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்து இருக்கின்றனர். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் போலீசார் கிடப்பில் போட்டனர்.

திடுக்கிட வைக்கும் தகவல்கள்

திடுக்கிட வைக்கும் தகவல்கள்

இதற்கிடையில், காணாமல் போனதாக சொல்லப்படும் சந்திர்வீரின் சகோதரர், தனது அண்ணன் மனைவிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருணுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் இதனால் அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று போலீசிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக மீண்டும் விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, போலீசார் அருண் மற்றும் சவிதா ஆகிய இருவரையும் அழைத்து தங்கள் பாணியில் விசாரணையை தொடங்கினர். அப்போது திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கொடூரமாக கொலை

கொடூரமாக கொலை

இதன்படி சவிதாவுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் அருணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். தங்களின் நெருக்கத்திற்கு கணவர் இடையூறாக இருந்ததால் தாலி கட்டிய கணவர் என்று கூட பார்க்காமல் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதையடுத்து வீட்டில் ஏற்கனவே தோண்டி வைக்கப்பட்டு இருந்த 7 அடி ஆழ குழியில் சந்தீர்வீரின் உடலை புதைத்து விட்டு அதன் மேல் சிமெண்ட் வைத்து பூசியுள்ளனர்.

துர்நாற்றமும் வெளியில் வீசவில்லை

துர்நாற்றமும் வெளியில் வீசவில்லை

ஆழமான குழி என்பதால் துர்நாற்றமும் வெளியில் வீசவில்லை. இதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருந்துள்ளது. இந்த வீட்டில் மிகவும் சாதாரணமாக அருண் வசித்து வந்து இருக்கிறார். இந்த கொலைச் சம்பவம் குறித்து சில முக்கிய தகவல் கிடைத்தால் மீண்டும் தீவிர விசாரணை நடத்தினோம். இதில் ஆண்நண்பருடன் இணைந்து கணவனை பெண் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிஸ்டல் மற்றும் அரிவாள்

பிஸ்டல் மற்றும் அரிவாள்

கொலைக்கு பயன்படுத்திய பிஸ்டல் மற்றும் அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம். வீட்டின் தரைதளத்தில் இருந்து எலும்புக் கூடுகளும்மீட்கப்பட்டு இருக்கின்றன" என்றனர். இந்தக் கொலை சம்பவம் காசியாபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+