இரவில் ஆசையோடு அழைத்த பெண்.. வீட்டுக்கு போன 45 வயது கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதி.. உயிரே போச்சே
லக்னோ: கள்ளக்காதல் செய்வது மிகவும் தவறானது. கள்ளக்காதலில் பிரச்சனை வரும்போது சம்பந்தப்பட்ட இருவரின் குடும்பமும் பாதிக்கப்படும். ஆனாலும் கூட கள்ளக்காதலை பலரும் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் இரவில் ஆசையோடு கள்ளக்காதலி அழைத்ததால் வீட்டுக்கு போன 45 வயது நிரம்பிய நபர் பிணமான சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பால் பகுதியை சேர்ந்தவர் அனீஷ். இவருக்கு 45 வயது ஆகிறது. இவரது பக்கத்தில் வீட்டில் ரயீஸ் என்பவர் வசித்து வருகிறார். ரயீஸின் மனைவி பெயர் சித்தாரா. பக்கத்து வீடு என்பதால் அனீஷ் மற்றும் ரயீஸ் குடும்பத்தினர் இடையே நல்ல பழக்கம் இருந்து வந்தது.

இருவரும் உணவுகளை பரிமாறி கொண்டுள்ளனர். அதேபோல் பணக்கஷ்டத்திலும் பணம் கொடுத்து உதவி வந்துள்ளனர். இதனால் இருகுடும்பத்தினரும் உறவினர்கள் போல் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தான் அனீசுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் நேற்று இரவில் திடீரென்று அனீஸ் இறந்தார். அவரது வீட்டின் அருகே உடலில் காயங்களுடன் அவருக்கு உயிருக்கு போராடினார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இறந்ததாக தெரிவித்தனர்.
இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனீஷின் தந்தை முஷ்தாகிம் போலீசாரிடம் பக்கத்தில் வீட்டில் வசிக்கும் ரயீஸ் மற்றும் சித்தாரா தம்பதி கொலை செய்ததாக தெரிவித்தனர். இதுபற்றி முஷ்தகிம் கூறுகையில், ‛‛என் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7 லட்சம் கடனாக கொடுத்த பணத்தை வாங்க அனீஷ் பக்கத்தில் வீட்டில் உள்ள ரயீஸ் - சித்தாரா வீட்டுக்கு சென்றான்.
அப்போது ரயீஸ் - சித்தாரா ஆகியோர் இணைந்து என் மகனை தாக்கி உள்ளனர். ஸ்கூருட்ரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர். எப்படியோ போராடி வீட்டை விட்டு வெளியே வந்தவன் இப்போது இறந்துவிட்டான்'' என்று கூறினார். இதையடுத்து போலீசார் ரயீஸ் - சித்தரா தம்பதியை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த, விசாரணையின்போது தான் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, இறந்த அனீசுக்கும், பக்கத்தில் வீட்டில் இருக்கும் ரயீஸின் மனைவி சித்தாராவுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ள நிலையில் இப்போது அனீசை வீட்டுக்கு வரழைத்த சித்தாரா தனது கணவர் ரயீசுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரயீஸ் - சித்தாரா தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட கூடுதல் எஸ்பி ராஜேஷ் குமார் ஸ்ரீவத்சவா கூறுகையில்,‛‛அனீஷ் இறந்தது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதல் விஷயத்தில் கொலை நடந்துள்ளது. அனீசை, ரயீஸ் தனது மனைவி சித்தாராவுடன் சேர்ந்து கொன்றுள்ளார். இந்த கொலையை ரயீஸ் - சித்தாரா ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு நிகழ்த்தி உள்ளனர். இந்த கொலைக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இதுபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications