கூட்டு பலாத்காரம் செய்து கொலை.. நிர்பயா சம்பவம் போல் பிறப்புறுப்பில் இரும்பு ராடு நுழைத்த கொடூரம்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் படான் மாவட்டத்தில் நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் நடைபெறுகின்றன. மிகவும் கொடூரமான முறையில் இவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள்.
படான் மாவட்டத்திலும் ஈரக்குலையே நடுங்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பதான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிய நடுத்தர வயதுடைய பெண் ஞாயிற்றுக்கிழமை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

காவல் நிலையம்
அந்த பெண்ணை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அந்த பெண் வீட்டார், உகைதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்றுமுன் தினம் இரவு 12 மணிக்கு அந்த பெண்ணை காரில் ஒரு டிரைவர் உள்பட 3 பேர் அழைத்து வந்து கிராமத்தில் விட்டுவிட்டு தப்பியோடினர்.

பெண் மருத்துவர்
ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ப்பதற்குள் அவர் இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை பெண் மருத்துவர் உள்பட 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர்.

சித்ரவதை
அந்த பெண்ணின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகின. அதில் அந்த பெண் மிகவும் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை நடந்த பிரேத பரிசோதனையில் அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது பிறப்புறுப்பில் இரும்பு ராடை நுழைத்து சித்ரவதை செய்தது தெரியவந்தது.

விலா எலும்புகள்
அந்த பெண்ணின் கால்கள் உடைக்கப்பட்டன. அவரது நுரையீரலும் மிகவும் கனமான பொருளை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. அவரது விலா எலும்புகளும் உடைக்கப்பட்டன. உடலிலிருந்து அதிக ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புகாரின் பேரில் மஹன்ட் பாபா சத்யநாராயணன், வேத்ராம், டிரைவர் ஜாஸ்பால் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

நிர்பயா கொடூரம்
இது போல் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி நுழைத்த சம்பவம் நிர்பயா சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியான நிர்பயா மிக கொடூரமான முறையில் 5 பேர் கொண்ட மிருகங்களால் வேட்டையாடப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications