லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யோகி ஆளும் உ.பி.யில்.. ஆம்புலன்சில் அதிக பணம் கேட்டதால்.. கணவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்ற பெண்

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் இறந்த கணவரின் உடலை, ஒரு பெண் ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை? 11 பேர் உயிரிழப்பு - தினகரன் 'அதிர்ச்சி' ட்வீட் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை? 11 பேர் உயிரிழப்பு - தினகரன் 'அதிர்ச்சி' ட்வீட்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு யாருக்கும் அடங்காமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

உ.பி.யில் நிலைமை மோசம்

உ.பி.யில் நிலைமை மோசம்

நாட்டின் பல்வேறு மாநிலத்தில் மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை. ஒரு சில இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் கடுமையாக நிலவுகிறது. இதனால் வட மாநிலத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள் எற்பட்டு வருவதை காண முடிகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்திலும் நிலைமை மோசமாக இருக்கிறது.

ஆக்சிஜன் தட்டுப்பாடு

ஆக்சிஜன் தட்டுப்பாடு

உ.பி.யில் கடந்த 24 மணி நேரத்தில் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும் , 250-க்கும் மேற்பட்ட இறப்புகளும் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான நோயாளிகள் உயிரை விட்டு வருகின்றனர்.

ஆட்டோவில் கொண்டு சென்ற உடல்

ஆட்டோவில் கொண்டு சென்ற உடல்

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், கொரோனாவால் இறந்த கணவரின் உடலை ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு செல்லும் காட்சிகள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன. கணவரின் உடலை கொண்டு செல்வவதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு பணம் கேட்டதால், அதனை கொடுக்க முடியாததால் அந்த பெண் கணவரின் உடலை ஆட்டோவில் கொண்டு சென்றது தெரியவந்தது.

மக்கள் பீதி

மக்கள் பீதி

இந்த காட்சிகளை இணையவாசிகள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக கொரோனா வீரியத்தால் மிகவும் கவலைக்கிடமான தந்தைக்கு மருத்துவமனைகளிலோ அல்லது கோவிட் சிகிச்சை மையங்களிலோ சிகிச்சை அளிக்க படுக்கை வசதிகள் இல்லை. இதன் காரணமாக தந்தை இறந்து விட்டதாக அவரது மகன் குற்றம்சாட்டினார். உத்தரபிரதேசதத்தில் இவ்வாறு பல்வேறு அதிர்ச்சி நடக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
woman in an auto rickshaw carried the body of her corona dead husband in Uttar Pradesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X