அவர்களுடன் நாங்கள் கூட்டா? அதுக்கு நான் உயிரை விட்டுடலாம்.. பிரியங்கா காந்தி பகீர் பேச்சு!
லோக்சபா தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டி பெரிய வைரலாகி உள்ளது.
லக்னோ: லோக்சபா தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச மாநில கிழக்கு பகுதி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டி பெரிய வைரலாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நேற்று அளித்த பேட்டியில், பகுஜன் சமாஜ் - சமாஜ் வாதி கூட்டணியில் இணையாதது எங்களுக்கு வருத்தம் கிடையாது. நாங்கள் இப்போதும் நண்பர்களே. நாங்கள் பாஜகவின் வாக்குகளை பிரிப்போம்.
எங்கள் திட்டம் எல்லாம் பாஜகவை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்பதுதான். காங்கிரஸ் கட்சியின் கணக்குப்படி அது கண்டிப்பாக நடக்கும் என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.

என் கருத்து
இதுகுறித்த சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி அளித்தார். அதில், பாஜகவிற்கு காங்கிரஸ் கட்சி உதவுகிறது. பிரியங்கா காந்தி சொல்லும் கணக்கு தவறானது. பிரியங்கா காந்தி சார்பாக காங்கிரஸ் நிறுத்தி இருக்கும் வேட்பாளர்கள் பாஜகவிற்கு உதவுவார்கள். பாஜகவுடன் காங்கிரஸ் ரகசிய கூட்டு வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பிரியங்கா பேட்டி
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரியங்கா காந்தி, பாஜகவுடன் நாங்கள் கூட்டா? என்ன கதை இது. அவர்களை போல மோசமான கொள்கை கொண்டவர்களுடன் நாங்கள் எப்படி சேர முடியும். முடியவே முடியாது. என் வாழ்நாளில், நான் அரசியல் இருக்கும் வரை அது நடக்காது.

காங்கிரஸ் எப்படி
உத்தர பிரதேசத்தில் உள்ள எல்லா காங்கிரஸ் உறுப்பினர்களும் பாஜக வாக்கை பிரிக்கவே நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். வேறு யாருடைய ஓட்டையும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பிரிக்க போவதில்லை. நான் இதில் தெளிவாக இருக்கிறேன்.

வலிமையில்லாத நபர்கள்
அதே சமயம் நாங்கள் வலிமையில்லாத வேட்பாளர்களை நிறுத்தவில்லை. நாங்கள் நிறுத்தியவர்கள் எல்லோரும் பலமான வேட்பாளர்கள். எங்கள் சொந்த பலத்தில் நாங்கள் போட்டியிடுகிறோம். பெரும்பாலான இடங்களில் எங்கள் சொந்த பலத்தில் நாங்கள் நிற்கிறோம்.

மானம்
நாங்கள் வேட்பாளர்களை மிக மிக கவனமாக தேர்வு செய்து இருக்கிறோம். நாங்கள் பாஜகவை ஆதரிப்பதாக சொல்வதை ஏற்க முடியாது. அதை செய்வதற்கு நான் இறந்து போய்விடலாம். நான் இதில் தெளிவாக இருக்கிறேன், என்று பிரியங்கா காந்தி கோபமாக குறிப்பிட்டுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications