உயரும் வங்கி கடன் விகிதம்! பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க யோகி ஆதித்யநாத் புது யோசனை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் கடன் மற்றும் வைப்பு விகிதத்தை உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையின் 100வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த கிளை கடந்த 1923ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது இந்த நகரின் மக்கள் தொகை 50 ஆயிரத்திற்குள்தான் இருந்தது. ஆனால் தற்போது 20 லட்சமாக இது உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் இந்த 100வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தொழில் முனைவோர் முயற்சிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கடன்- வைப்பு (சிடி) விகிதத்தை உயர்த்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் குறித்த முக்கியத்துவத்தை வங்கிகள் புரிந்துக்கொள்ள வேண்டும். வங்கியின் டெபாசிட் மூலதனத்தில் நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும், வளர்ச்சி செயல்முறையை விரைவுபடுத்தும். கடந்த ஆறு ஆண்டுகளில், கோரக்பூரில் தொழில்கள் விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளன. நகரம் இப்போது உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் புதிய தொழில்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன.
தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் ஆதரவளிக்கும்போது தொழில் வளர்ச்சி வேகமெடுக்கும். இது பொருளாதார வளர்ச்சியில் பிரதிபலிக்கும். தற்போது, கோரக்பூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் டெபாசிட் மூலதனம் ரூ.11,500 கோடி. கடன்கள் ரூ.4,500 கோடி அளவில் வழங்கப்பட்டுள்ளன. கிரெடிட்-டிபாசிட் (சிடி) விகிதம் 60 சதவீதத்தை எட்டினால், டெபாசிட் செய்யப்பட்ட மூலதனம் ரூ.25,000 கோடியாக உயரும். இந்த விரிவாக்கம் சமூக முன்முயற்சிகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான வங்கியின் திறனை மேம்படுத்தும்.
கடந்த 2014க்கு பிறகு, அதாவது பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வங்கித் துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜன்தன் கணக்குகளை தொடங்கி, ஆதாருடன் இணைப்பதன் மூலம் ஊழல்களை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இப்படி இருக்கையில் உத்தரப் பிரசேதத்தின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகள் கடன் மற்றும் வைப்பு விகிதத்தை உயர்த்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications