அடிதூள்.. அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ்! உ.பி முதல்வர் யோகி அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு ரூ.7000 தீபாவளி போனஸாக வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு உ.பி அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு போனஸை அறிவித்திருக்கிறார்.

Yogi Adityanath announced a bonus of Rs 7000 for government employees in Uttar Pradesh

இது தவிர அரசு உதவி பெறும் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், நகர்ப்புற அமைப்புகள், யுஜிசி ஊழியர்களுக்கு 46 சதவீத அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.2,091 கோடி இழப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல இந்த போனஸ் தொகை பயனாளர்களை சென்றடைய சுமார் ரூ.314 கோடி கூடுதல் செலவாகும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசம் தற்போது ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இதற்காக ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அரசு ஊழியர்களின் பங்களிப்பு தற்போது இன்றியமையாததாக இருக்கிறது. அந்த வகையில் இந்த போனஸ் என்பது வளர்ச்சியின் முதலீடு என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். இது 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கும், 14 லட்சம் ஆசிரியர்களுக்கும் பலனளிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+