சர்வதேச அளவில் உயர்ந்த இந்தியாவின் தரம்! பிரதமர் மோடிதான் காரணம்.. யோகி ஆதித்யநாத் நெகிழ்ச்சி
லக்னோ: இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் மோசமான நிலையில் இருந்ததாகவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் கட்டப்பட்ட நான்கு வழி, ஆறு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள் நன்றாக இருந்தன. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் ஒரேயொரு முறை மட்டுமே சாலை விரிவாக்க பணிக்கு ரூ.3,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் இந்த நிதியில் போடப்பட்டன. ஆனால் அதன் பின்னர் எந்த திட்டங்களையும் காங்கிரஸ் கொண்டுவரவில்லை.

ஏனெனில் அப்போதைய காங்கிரஸ் அரசு ஊழலில் மலிந்துவிட்டது. அவர்கள் எந்த திசையை நோக்கி செல்வது என்கிற முடிவுக்குள் வரவில்லை. இப்படியாக காங்கிரஸ் அரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது நமது நாடு பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கதையும் இதுதான். கடந்த 2017க்கு முன்னர் இம்மாநிலத்தில் ஏராளமான பிரச்னைகள் இருந்தன. ஆனால் தற்போது அனைத்துக்கும் ஓர் தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைதான் காரணம்.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இங்கு மாஃபியாக்களின் ஆட்சிதான் நடந்துக்கொண்டிருந்தது. மாஃபியாக்கள் தலையிடாத தொழில்களே இல்லை. அனைத்திலும் இவர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. ஆனால் இன்று, இந்த மாஃபியாக்கள் தங்கள் உயிருக்காக அரசாங்கத்திடம் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கழுத்துகளில் வழக்குப்பதிவின் விவரங்கள் அடங்கிய பலகைகளை மாட்டிக்கொண்டு திரிந்துக்கொண்டிருக்கிறார்கள்.
காவல்துறையினர் இவர்கள் மீதான பிடியை இறுக்கியிருக்கிறது. இந்த அரசு 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்கிற தாரக மந்திரத்துடன் பயணித்துக்கொண்டிருக்கிறது. அதாவது நாங்கள் சமரசத்தை விட வளர்ச்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு எங்கள் கொள்கையின் வெளிப்பாடுதான். இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications