உ.பியில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிய யோகி அரசு! புலம்பெயர் தொழிலாளர் எண்ணிக்கையும் குறைந்தது

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பாஜக பொறுப்பேற்ற கடந்த 6 ஆண்டுகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதன் மூலம் மாநிலத்தில் ரூ.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் செய்ய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதனால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பாஜக கூறி வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளையும் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது.

Yogi Adityanath government created new job opportunities in last 6 years

எனவே மாநிலத்தின் மீது மத்திய பாஜக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இப்படியாக நடைபெற்றதுதான் உலக முதலீட்டாளர்கள் மாநாடாகும். அதேபோல உத்தரப் பிரதேசத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதுதான் எங்கள் நோக்கம் என பாஜக கூறி வருகிறது. இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டதுதான் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.

இதற்கு பின்னர் நடத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலும் மாநில அரசு 1 டிரில்லியன் டாலர் வளர்ச்சியை பிரதிபலிக்கும் நோக்கில் பல புதி திட்டங்களையும் அறிவித்தது. இந்த திட்டங்களை செயல்படுத்த அதிக அளவில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. அதாவது இதற்கு முன்னர் எந்த பட்ஜெட்டிலும் இதுபோன்று அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் இந்த வளர்ச்சியை சாத்தியமாக்க 10 முக்கிய துறைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்படுத்த வெண்டும் என மாநில அரசு முடிவெடுத்தது.

அதன்படி கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் தொடக்கி வைத்து வருகிறார். இந்நிலையில் அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ள அதிகாரிகள், கடந்த 6 ஆண்டுகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், எனவே புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+