வறட்சியை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்! யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: பருவமழை தவறியதால் உத்தரப் பிரதேசத்தில் சில மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. மழையை நம்பி நடப்பட்ட பயிர்கள் அனைத்தும் கருகி மாட்டு தீவனத்திற்கு கூட பயன்படாத நிலையில் இருக்கிறது. இதனை சமாளிக்க வறட்சிக்கான நிவாரணத்தை உத்தரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நிவாரணம் பெறும் தேதி நீடிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
வறட்சியைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளும் செய்வதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். இதுகுறித்து மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வறட்சியாக இருந்தாலும், வெள்ளமாக இருந்தாலும் விவசாயிகள் கவலைப்பட வேண்டாம். நெருக்கடியின் போது மாநில அரசு அவர்களுடன் நிற்கும். விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயனடைவதை உறுதி செய்வதற்காக திட்டத்தின் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

மழை குறைவாக உள்ள 14 மாவட்டங்களில் மினி விதைப் பெட்டிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நஷ்டத்தை ஈடுகட்ட விவசாயிகளுக்கு 1.50 லட்சம் மினி கிட்களுடன், 5,800 குவிண்டால் விதைகளை வழங்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. எனவே வறட்சி குறித்து விவசாயிகள் எந்த கவலையும் அடைய தேவையில்லை. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் ஏராளமான நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. எனவே பாஜக விவசாயிகளை காப்பாற்றும்.
கடந்த கால ஆட்சியில் எதுவும் உருப்படியாக செய்யவில்லை. எல்லா வளங்களும் வீணாக்கப்பட்டன. ஆனால் இந்த முறை அப்படியல்ல. நாங்கள் வேளாணை வளர்த்தெடுக்க திட்டமிடலுடன் பயணித்து வருகிறோம்" என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications