உத்தரப் பிரதேசத்தில் விரைவில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாகும்! யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விரைவில் குழந்தை தொழிலாளர்களே இல்லாத நிலை உருவாகும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்ததில்லை. ஆனால் யோகி இந்த சாதனையை முறியடித்து 6 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக மாநில அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் முக்கியமான திட்டம்தான் 'பால் ஷ்ராமிக் வித்யா யோஜனா'. இது குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

தற்போது வரை உத்தரப் பிரதேசம் முழுவதும் 20 மாவட்டங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் 2,000 குழந்தைகள் பலனடைந்துள்ளனர். 8 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் அதிக அளவில் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையை மாற்ற மாநில அரசும் ஏராளமான முயற்சிகளை எடுத்தது. ஆனால் எதுவும் நினைத்த அளவுக்கு பலனளிக்கவில்லை என்பதால் அதிரடியாக 'பால் ஷ்ராமிக் வித்யா யோஜனா' திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கினார்.
இந்த திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர்களாக கண்டறியப்படும் சிறார்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.2,200 வரவு வகைக்கபடும். இந்த சிறார்கள் 8,9 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியடையும்போது அவர்களது அக்கவுண்ட்டில் கூடுதலாக ரூ.6,000ஐ அரசு டெபாசிட் செய்யும். இந்நிலையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள 75 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 சிறார்கள் குழந்தை தொழிலாளர் எனும் நிலையிலிருந்து மீட்கப்படுவார்கள்.
"இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்போது, உத்தரப் பிரதேசத்தில் குழந்தை தொழிலாளர்களே இல்லாத நிலை உருவாகும். இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை" என்று யோகி ஆதித்யநாத் உறுதி தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications