ஸ்மார்ட் + பாதுகாப்பு.. இதுதான் உ.பி நகர்ப்புற மக்களின் வாழ்க்கை! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் நகர்ப்புற வாழ்க்கை என்பது மிகவும் பாதுகாப்பானதாக மாறி இருக்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுல்தான்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தின் நகர்ப்புற வாழ்க்கை என்பது ஒரு காலத்தில் மிகவும் அச்சம் நிறைந்ததாக இருந்தது. வன்முறைகள், கலவரங்கள், துப்பாக்கிகள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், கொள்ளை என நகரம் ஏறத்தாழ ஒரு நரகத்தை போல இருந்தது.

ஆனால் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த நிலைமை தலைகீழாக மாற்றப்பட்டது. துப்பாக்கியுடன் திரிந்த இளைஞர்களிடம் இந்த அரசு டேப்லெட்களை கொடுத்தது. தற்போது அவர்கள் கல்வியின் பக்கம் திரும்பியுள்ளனர். அதேபோல சட்டம் ஒழுங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே வன்முறையிலும், கலவரங்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்களின் நம்பிக்கையை இந்த அரசு காப்பாற்றியுள்ளது.
எங்கள் அரசில் நகர்ப்புற வாழ்க்கை என்பது பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் இரட்டை என்ஜின் அரசுதான். நகரங்களில் சுத்தமான குடிநீர் வசதி, தெருவோர வியாபாரிகளுக்கு பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன், கழிப்பறைகள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள் ஆகியவற்றை இந்த அரசு சிறப்பாக செய்து கொடுத்திருக்கிறது. பூர்வாஞ்சல் விரைவுச் சாலை கிழக்கு உத்தரப் பிரதேச வளர்ச்சியின் உயிர்நாடியாக மாறியுள்ளது.
இவ்வளவு சிறப்புவாய்ந்த சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது எங்கள் அதிர்ஷ்டம். அதேபோல இன்று நான் பேசிக்கொண்டிருக்கும் சுல்தான்பூரில் விரைவில் மருத்துவக் கல்லூரி வர இருக்கிறது. அதேபோல இங்கிருக்கும் சர்க்கரை ஆலைகள் மீண்டும் செயல்பட தேவையான உதவிகள் அனைத்தும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. நமது மாநிலத்தின் அடிவேர் கரும்பு விவசாயம்தான். ஆனால் கடந்த கால ஆட்சியில் இந்த விவசாயம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டது.
கரும்பு விவசாயிகளை இந்த அரசு கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. எனவே சர்க்கரை ஆலைகள் இழுத்து மூடப்பட்டன. அங்குள்ள கருவிகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நாங்கள் கரும்பு விவசாயிகளுக்கு அனைத்து வகையிலும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆக நகரங்களாக இருந்தாலும், கிராமங்களாக இருந்தாலும் அம்மக்களின் வாழ்க்கையில் இந்த பாஜக அரசு ஒளியூட்டியுள்ளது. எனவே இந்த டபுள் என்ஜின் அரசை ட்ரிபிள் என்ஜின் அரசாக அப்கிரேட் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் பாஜகவுக்கு வாக்களியுங்கள்" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
