ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம்! இலக்கில் உறுதியாக இருக்கிறோம்.. யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: அடுத்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்துவதில் உறுதியாக இருக்கிறோம் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளில், உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்க முடிந்துள்ளது. தனிநபர் வருமானத்தையும் இரட்டிப்பாக்க முடிந்தது. கொரோனா தொற்று காலத்தில் கூட எங்களது வளர்ச்சி தடைபட்டு போகவில்லை. எனவே, அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதாரத்தை 4 மடங்கு வளர்ச்சியடையச் செய்வோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நமது தேசத்தை 5 டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்.

எனவே அதற்கு பங்காற்ற வேண்டும் என்பதற்காக உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்த நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். மாநில அரசின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள், 2023-24 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பட்ஜெட்டுடன் கொடுக்கப்பட்ட பகுப்பாய்வில், உத்தரப் பிரதேசத்தின் GSDP கடந்த 2016-17ம் ஆண்டில் ரூ.12.47 லட்சம் கோடியிலிருந்து 2022-23ம் ஆண்டில் ரூ.20.48 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்பதைக் குறிக்கிறது. இது 2023-24ம் ஆண்டில் ரூ.24.39 லட்சம் கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது .
தேசிய அளவில் MSME தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ள மாநிலங்களில் உ.பியும் ஒன்று. மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் என்கிற அளவில் உயர்த்துவதை யோகி அரசு இலக்காக வைத்திருக்கும் நிலையில், அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த MSME தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்திற்கு இந்த திட்டம் மூலம் நிதியுதவி பெற முடியும். தொழில் நிறுவனர் விபத்தில் உயிரிழந்துவிட்டால் அதற்காக ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம். ஆனாலும் இதற்காக சில வரைமுறைகள் உண்டு. அதற்குள் பொருந்தும் தொழில் முனைவோர்களுக்கு மட்டுமே இந்த இழப்பீடு வழங்கப்படும்" என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications