ஆக்ரா டூ மதுராவுக்கு ஹெலிகாப்டர் சேவை.. அசத்தும் யோகி ஆதித்யநாத்! கலக்கும் உத்தரப் பிரதேசம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஆக்ரா-மதுரா வரையிலான ஹெலிகாப்டர் சேவையை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் உத்தரப் பிரதேசம் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறியுள்ளார்.
கடந்த 25ம் தேதி முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று, மாநிலத்தின் முதல் ஹெலிகாப்டர் சேவையை அவர் தொடங்கி வைத்தார். இரு நகரங்களுக்கும் இடையில் ஏறத்தாழ 90 கி.மீ இருக்கிறது. இதனை சாலை மார்கமாக கடக்க குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இந்த பயண நேரத்தை குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு வெறும் 15-20 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.

இந்த திட்டம் அரசு, தனியார் மற்றும் மக்கள் பங்களிப்புடன் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தால் ஹெலிகாப்டர் வாடகைக்கு விடப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 3 சர்வதேச மற்றும் 6 உள்நாட்டு விமான நிலையங்கள் உள்ளன, இவை அனைத்திற்கும் ஹெலிகாப்டர் சேவை வழங்கப்படுகிறது. இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், "உத்தரப் பிரதேசம் தொடர்ந்து முன்னேறி வருவதற்கான அடையாளம்தான் இது" என்று கூறியுள்ளார்.
மேலும், "பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த கால ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் விமான நிலையங்கள் மிக குறைவாகவே இருந்தன. ஆனால், தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே உலக நாடுகளுடன் உத்தரப் பிரதேசத்தின் நேரடி தொடர்பு செழுமை அடைந்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications