பக்தர்களின் புனித பூமி உத்தரப் பிரதேசம்! இந்த மாற்றத்திற்கு பாஜக அரசுதான் காரணம்.. யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தை பற்றிய இந்தியாவின் பார்வை மாறியுள்ளது. இதற்கு பாஜக அரசின் ஆட்சிதான் காரணம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் சிறப்புரையாற்றிய அவர், "இந்தியா வல்லரசாக உருவெடுத்து வருவதை உலகமே அறிந்திருப்பதால், இந்தியாவை யாரும் இலகுவாகக் கருதுவதில்லை. தற்போது இந்தியா பற்றிய பார்வை மாறியுள்ளது. இதற்கு திறமையான தலைமைதான் காரணம். பிரதமர் நரேந்திர மோடிதான் அந்த திறமையான நபர்.

பொருளாதார ரீதியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கிறது. பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல ஜி20 நாடுகளிலும் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது. ஆனால் இதே அண்டை நாட்டை பாருங்கள். பாகிஸ்தானில் எதும் சரியில்லை. மக்களுக்கான அடிப்படை வசதிகள் தொடங்கி, உணவு, கல்வி, வேலை வாய்ப்பு பொருளாதாரம் என எதுவும் சரியில்லை.
ஆனால் இந்தியாவின் நிலைமை கடந்த 9 ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில், பாஜக அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் சார்ந்த திட்டங்கள்தான் அதிகம். இந்த திட்டங்கள் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டது. உதாரணமாக உத்தரப் பிரதேசத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.2,000 கோடி நாங்கள் ஒதுக்கியிருந்தோம். இதன் மூலம் 2023-2024ம் ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் தரம் தனியார் பள்ளிகள் அளவுக்கு உயரும்.
உத்தரப் பிரதேசம் என்றால் மாஃபியாக்களின் கூடாரம் என்கிற கருத்து ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இன்றோ இம்மாநிலம் பக்தர்களின் புனித இடம் என மாறியிருக்கிறது. இதற்கு காரணம் பாஜக ஆட்சிதான் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications