உ.பி.யின் வளர்ச்சியை ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக் அங்கீகரித்துள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலமாக மாறியிருக்கிறது என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் மாநிலத்தின் வளர்ச்சியை ரிசர்வ் வங்கியும், நிதி ஆயோக்கும் அங்கீகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருந்தது. ஆனால் இந்த 6 ஆண்டுகளில் இந்த மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கிறது. சுற்றுலாத்துறை, தொழில்துறை ஆகியவை சிறப்பான வளர்ச்சியை எட்டியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலின் விளைவாக, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பாதுகாப்பை உறுதிசெய்யும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் மாறியுள்ளது.

நாட்டிலேயே மக்கள் தொகை அடிப்படையில் உத்தரப் பிரதேசம் மிகப்பெரிய மாநிலமாகும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இது வளர்ச்சியடையாத மாநிலமாக கருதப்பட்டது. யாரும் உ.பி.க்கு வர விரும்பவில்லை. உ.பி.யின் பெயரைக் கேட்டாலே மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது, ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. சமீபத்திய ரிசர்வ் வங்கி மற்றும் NITI ஆயோக் அறிக்கைகள், உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் மாற்றத்தை அங்கீகரித்துள்ளன.
உ.பி.யில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கேட்பவர்களின் கண்களை திறந்து இந்த அறிக்கையை படிக்க வேண்டும். நாட்டிலேயே பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் முதல் மாநிலம் உ.பி. தான் என்று அவர்களிடம் சொல்லுங்கள். உத்தரபிரதேசம் ஒரு பெரிய முதலீட்டு மையமாக வேகமாக வளர்ந்து வருகிறது, தொழில்முனைவோருக்கான வங்கிச் சேவைகளில் சிறந்து விளங்குகிறது மற்றும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
உ.பி.யில் உள்ள வட இந்தியாவின் முதல் டேட்டா சென்டர் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக உள்ளது, அதே சமயம் உ.பி.யின் ஃபிலிம் சிட்டி மாநிலத்தின் மற்றொரு அடையாளமாக உருவாகியுள்ளது. இதற்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் உ.பியின் தொழில் முனைவோர் மாநாட்டை டெல்லியிலும், மும்பையிலும் நடத்தினர். ஏனெனில் உ.பி அப்போது வளர்ச்சியடையாத மாநிலமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் நாங்கள் இந்த மாநாட்டை லக்னோவில் நடத்தி அசத்தினோம். இன்று உத்தரப் பிரதேசம் வளர்ந்து வரும் புதிய இந்தியாவின் புதிய அடையாளமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications