வளர்ச்சியடைந்து வரும் புதிய இந்தியாவின் முகமாக உ.பி இருக்கிறது! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் புதிய முகமாக உத்தரப் பிரதேசம் இருக்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவுக்கு, உத்தரப் பிரதேசம் குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார பங்களிப்பை அளித்துள்ளது. இதற்கு முன்னர் உத்தரப் பிரதேசம் வளர்ச்சிக்கான போராட்டத்தில் இருந்தது. ஆனால் தற்போது இம்மாநிலம் வளர தொடங்கியுள்ளது. புதிய விரைவுச் சாலைகள், நீர்வழிகள் மற்றும் விமான நிலையங்கள் மாநிலத்தின் வளர்ச்சியில் கூடுதல் பங்களிப்பை அளிக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் உத்தரப் பிரதேசம் இந்த வளர்ச்சியின் பாதையில் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறது. எங்களது மாநிலம் தற்போது புதிய இந்தியாவின் புதிய முகமாக மாறியிருக்கிறது" என்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டரில் நடைபெற்ற உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சியின் விழாவில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். இந்த வர்த்தக கண்காட்சியில் 70 நாடுகளைச் சேர்ந்த 70,000க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்த கண்காட்சி மாநிலம் முழுவதும் உள்ள 96 லட்சம் MSME தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே மாநிலம் முழுவதும் உள்ள கைவினைக்கலைஞர்களுக்கும், அவர்களது தயாரிப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்க யோகி ஆதித்யநாத் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 54 தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு உள்ளூர் தயாரிப்புகளுக்கு அங்கீகாரம் பெற மாநில அரசு முயன்று வருவதாக யோகி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications