பாஜக அரசு மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்! உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பாஜக ஆட்சியில் உத்தரப் பிரதேசம் ஏராளமான விளையாட்டு வீரர்களை கண்டெடுத்திருக்கிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, "கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 3,000 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 50,000 உதவி வழங்கப்படுகிறது, இது பயிற்சி, உணவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பிற செலவுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நமது மாநிலத்தின் அன்னு ராணி, பருல் சவுத்ரி மற்றும் சுதா சிங் ஆகியோரின் திறமைகள் பாராட்டப்பட வேண்டியவையாகும்.
விளையாட்டு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமானதாகும். விளையாட்டில்தான் வாழ்க்கை குறித்த சில விஷயங்களை புரிந்துக்கொள்கிறோம். இன்று முழு நாடும் விளையாட்டு வீரர்களைப் போல் சிந்திக்கிறது. விளையாட்டு வீரர்கள் விளையாடும்போது முதலில் தேசத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அந்த நேரத்தில் எல்லாவற்றையும் பணயம் வைத்து நாட்டுக்காக விளையாடுகிறார்கள். இப்படியான அர்ப்பணிப்பு காரணமாக நாடும் ஒரு பெரிய இலக்குடன் முன்னேறி வருகிறது.
நமது மாநிலத்தின் மீது இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. அதன் பிரதிபலிப்புதான் புதிய விளையாட்டு வீரர்களின் வருகை. பாஜக அரசு இளைஞர்களை சரியாக வழிநடத்துகிறது. இளைஞர்களின் சக்தியை சரியாக பயன்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications