மூன்று மடங்கு அதிகரித்த ஏற்றுமதி.. புதிய இந்தியாவின் புதிய உ.பி! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மும்மடங்கு அதிகரித்துள்ளதாகவும், வளர்ச்சி பாதையில் மாநிலம் வேகமாக முன்னேறிக்கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் உத்தரப் பிரதேசம் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்ட பின்னர் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் என்றாலே வளர்ச்சியில் பின்தங்கி இருக்கும் மாநிலங்கள் எனவும், தொழில் செய்வதற்கான ஏற்ற இடங்கள் இல்லாத மாநிலங்கள் எனவும் கருதப்பட்டன.

ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. உள்ளூர் மக்களுக்கான குரல்" என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாக கொண்டு நாங்கள் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு எனும் திட்டத்தை கொண்டு வந்தோம். இது எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த திட்டம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது. அதேபோல மாநிலத்தின் ஏற்றுமதியையும் அதிகரித்துள்ளது.
இப்படியாக கடந்த ஆறு ஆண்டுகளில், தொழில்மயமாக்கலுக்கு ஏற்ற சூழலை மாநிலம் வளர்த்துள்ளது. இதன் விளைவு உத்தரப் பிரதேசம் தற்போது வருவாய் உபரி மாநிலமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல மாநிலத்தில் ஏற்றுமதி மூன்று மடங்காக அதிகரித்து ரூ.1.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசம்.
கடந்த பிப்ரவரி மாதம் நாம் வரலாற்று சிறப்புமிக்க உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை நடத்தினோம். அதுவும் லக்னோவில் நடத்தினோம். இதற்கு முந்தைய அரசுகள் உ.பிக்கான மாநாட்டை டெல்லியில் நடத்தின. ஆனால் நாங்கள் உ.பி தலைநகர் லக்னோவில் நடத்தினோம். ஏனெனில் நாங்கள் உத்தரப் பிரதேசத்தை உலக தரத்திற்கு மாற்ற விரும்புகிறோம்" என கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications