அப்படியே தலைகீழாய் மாறும் உ.பியின் சிறு நகரங்கள்! அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட யோகி ஆதித்யநாத்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு உத்தரப் பிரதேசம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

Yogi Adityanath launched a new scheme to modernize the small towns of Uttar Pradesh

இந்நிலையில், குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அதாவது 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களை அஸ்பிரேஷ்னல் சிட்டி திட்டத்தின் மூலம் மேம்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய யோகி, "நகராட்சிகளை பலப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சிகளில் வளர்ச்சி திட்டங்கள் வேகமாக்கப்படும்.

குறிப்பிட்ட நகரங்களில் உள்ள வளங்களை சரியான வழியில், மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த இந்த திட்டம் கைகொடுக்கும். அதேபோல பொருளாதார வளர்ச்சியும் இதன் மூலம் அதிகரிக்கும். மின்சார பேருந்துகள், சூரிய மின் சக்தியை சேமித்து பயன்படுத்த ஏற்ற கட்டமைப்புகளை உருவாக்குதல், பெரு நகரங்களுடன் இணைக்கும் சாலைகளை வலுப்படுத்துதல் என அனைத்தும் மேம்படுத்தப்படும். இது விரைவில் உத்தரப் பிரதேசத்தை நாட்டின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாற்றும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+