வெறும் வாக்குகளுக்காக அல்ல.. அரசு திட்டங்கள் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்
லக்னோ: அரசு அறிவிக்கும் திட்டங்கள் வாக்குகளுக்காக அல்ல என்றும், சமூகத்தின் தன்னம்பிக்கையை வளர்க்கவே எனவும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
லக்னோவில் தங்கும் விடுதியின் கட்டுமான பணிகளை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "அரசின் நல திட்டங்கள் குறித்து இளைஞர்கள் மத்தியில் கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு மக்களுக்காக என்ன செய்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை எந்த அளவுக்கு மக்களுக்கு பயன்படுகிறது என்பது குறித்தும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசத்தை 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதுதான் பாஜகவின் இலக்கு என்று கூறியுள்ள அவர் அதற்கு இடையூராக உள்ளவற்தை தகர்த்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சுட்டிக்காட்டிய யோகி ஆதித்யநாத், "இந்த மாநாடு நடத்தியதற்கு காரணம் முதலீடுகள் அதிக அளவில் குவிய வேண்டும் என்பதற்காகதான். இதற்கு முன்னர் நடந்த மாநாடுகள் குறித்து நமக்கு நன்றாக தெரியும்.
அந்த மாநாடுகள் உத்தரப் பிரதேசத்தை பற்றியதாக இருந்தாலும் அவை உத்தரப் பிரதேசத்திற்கு வெளியில்தான் நடைபெற்றன. ஆனால் முதல் முறையாக பாஜக அரசு இந்த மாநாட்டை உத்தரப் பிரதேசத்தில் நடத்தி காட்டியிருக்கிறது. இந்த மாநாட்டின் மூலம் சுமார் ரூ.35 லட்சம் கோடி வரை முதலீடுகள் வர இருக்கின்றன. இவ்வளவு முதலீட்டில் தொடங்கப்பட உள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை சிறப்பாக செயல்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தற்போது பாஜக அரசு இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தி வருகிறது. இதற்காக மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னெப்போதை விடவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், தொலை தொடர்பு என 10 முக்கிய துறைகள் தலைகீழ் மாற்றம் பெற இருக்கிறது. தொடக்க கல்விக்காக மட்டும் ரூ.1,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட இருக்கிறது.
இதற்கு தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். அதேபோல நான் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுவரை இம்மாநிலத்தில் ஒரு கலவரம் கூட நடக்கவில்லை. அதேபால குற்றங்கள்/குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இங்கு மாஃபியாக்களின் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
வளர்ச்சிக்கான திட்டங்கள் ஒருபுறம் எனில் மறுபுறம் சமூக வளர்ச்சிக்கான திட்டங்களும் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளன. கன்யா சுமங்கலா யோஜனா எனும் திட்டம் பெண் சிசு கொலையை தடுக்க அறிவிக்கப்பட்ட திட்டமாகும். மிஷன் இந்திரதனுஷ் திட்டம் பெண் குழந்தைகளை சுகாதாரமாக பராமரிப்பதை பற்றியது, இப்படி பெண்களின் வாழ்வாதாரத்தை மாற்ற ஏராளமான திட்டங்களை பாஜக அரசு அறிவித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications