உத்தரப் பிரதேசத்தில் மக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது..யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மக்களின் பிரச்னைகளுக்கு மாநில அரசு உரிய தீர்வை கொடுத்து வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி மேலும் வேகமடைந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த வரலாற்றை யோகி ஆதித்யநாத் முறியடித்து வெற்றிகரமாக 6 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். எனவே அம்மாநில அரசு இதனை சாதனையாக கொண்டாடி வருகிறது. அதேபோல புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் மாநிலத்தில் ஏராளமான சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எழுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதற்கு பதிலடி கொடுத்துள்ள யோகி ஆதித்யநாத், மக்களின் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டு வருவதாக கூறியுள்ளார். அதேபோல மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் பொதுப் பிரச்னைகளை தீவிரத்துடனும், உணர்திறனுடனும், கவனத்துடனும் கேட்கவும், திருப்திகரமான தீர்வுகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
நேற்று கோரக்நாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகத்தில் வைத்து மக்கள் குறை தீர்வு கூட்டத்தை நடத்தினார். இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். இதனையடுத்துதான் மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார். அதேபோல தனக்கு வந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அதிகாரிகளை பொறுத்த அளவில், அரசின் நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications